மட்டன் பிரியாணி, கறிதோசை.. விக்ரம் சக்சஸ் மீட் விருந்தை ரெடி பண்ணது இந்த இளம் ஹீரோவா ? இவரு CHEF-ஆ.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடிப்பில், அனிருத் இசையில் ஜூன் 17-ல் வெளியாகி வசூல் ரீதியாகவும் வரவேற்பு ரீதியாகவும் ட்ரெண்டிங்காக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம்.

Advertising
>
Advertising

இந்நிலையில் விக்ரம் சக்சஸ் மீட் நடந்தது. இதில் அனிருத், கமல், லோகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு சமபந்தியில் உணவுண்ணும் காட்சிகளை புகைப்படங்களில் காண முடிந்தது.

இதில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு நாட்டுக்கோழி சூப், முருங்கை கீரை சூப், மாம்பழ ரோல், லிச்சி பழ சந்தேஷ், மட்டன் கீமா உருண்டை, சிக்கன் பிச்சுப்போட்ட வறுவல், வஞ்சரம் மீன் வறுவல், இறால் தொக்கு, மட்டன் சுக்கா, சோள சீஸ் உருண்டை, பன்னீர் டிக்கா, மெக்சிகன் டாகோஸ், ஜலபேனோ சீஸ் சமோசா உள்ளிட்டவை மெனுவில் இடம் பெற்றிருந்தன.

இதேபோல் கொங்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, கொங்கு ஸ்பெஷல் சைவ பிரியாணி, தால்சா, ரைதா, விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிபாளையம் கிரேவி, சைவ பள்ளிபாளையம் கிரேவி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, சைவ குருமா என தடபுடலாக விருந்தில் என்ன என்ன ஐட்டங்களோ.. திறந்து பார்த்தால் தெரிந்துவிடும் என்று வடிவேலு பாடுவதற்கு இணங்க வைக்கப்பட்டிருந்தன.

இவை மட்டுமா.. இதுக்கு மேல தான் சம்பவமே இருக்கு என்பது போல், மதுரை மட்டன் கறி தோசை, முட்டை தோசை, மைசூர் மசால் தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, கொய்யாக்காய் சட்னி, கோவைக்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், சாமை அரிசி தயிர் சாதம், மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய், சுக்கு பால், ஐஸ்கிரீம், நறுக்கிய பழங்கள், பீடா உள்ளிட்டவையும் இந்த ‘கருணை மெனு’வில் இடம்பெற்றுள்ளன.

இந்த விருந்தையெல்லாம் சமைத்தவர்கள் யார் என்கிற விஷயம் தான் இப்போது அனைவருக்கும் கேள்வியாக எழுந்துள்ளது. இந்த விருந்தையெல்லாம் சமைத்தது பிரபல மாதம்பட்டி பாகசால சமையல் குழுதான் என்பதை ஏற்கனவே வெளியாகியிருந்த மெனு கார்டில் இருந்த தகவல்களை கொண்டு காண முடிந்தது. இந்நிலையில் தான் இந்த சமையல் நிறுவனத்தின் தலைவரும் இளம் Chef-மான மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி பலரும் பேசிவருகின்றனர்.

இவர் வேறு யாருமல்ல, மெஹந்தி சர்க்கஸ் எனும்  திரைப்படத்தின் ஹீரோ தான் இவர். ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரித்த இந்த படத்துக்கு ‘குக்கூ’ ராஜூ முருகன் வசனம் எழுத சரவண ராஜேந்திரன் இயக்கினார்.

இப்படத்தில் ஹீரோவாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் அதன் பின் கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில் தான் இவருடைய மாதம்பட்டி பாகசாலா-வில் இருந்து விருந்துக்கான உணவு தயார் செய்யப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Is this actor chef for vikram kovai feast kamalhaasan Lokesh

People looking for online information on Madhampatty Rangaraj, Vikram will find this news story useful.