“சண்டே.. அவங்களுக்கு டென்ஷன் டே!.. எலிமினேஷன் இருக்கா?” .. ‘பொடிவெச்சு’ பேசிய ரம்யா கிருஷ்ணன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்கிறதா? என்பது குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் பட்டவர்த்தனமாக அறிவித்துள்ளார்.

is there elimination biggboss ramya krishnans first sunday
Advertising
>
Advertising

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த 5வது சீசனில், நாடியா, சின்னப்பொண்ணு, மதுமிதா, சுருதி, இசைவாணி உள்ளிட்டோர் எலிமினேட் ஆகியுள்ளனர். இவர்களுள் எலிமினேட் ஆன அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இவரைத் தவிர, கோரியோகிராஃபர் அமீர் மற்றும் நடிகர் சஞ்சீவ் புதிதாக பிக்பாஸ் வீட்டிற்குள் இணைந்துள்ளனர்.

is there elimination biggboss ramya krishnans first sunday

இதனிடையே விறுவிறுப்பாக 55 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்புகையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதை தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நலம் தேறி வருகிறது.

இதனால், அவரிடத்தில் நின்று பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்கிற பேச்சுகள் எழுந்து வந்தன. இதனை அடுத்து இந்த கேள்விகளுக்கு விடையாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் பெயர் பேசப்பட்டது.

முன்னதாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஜாலியான நிகழ்ச்சியான BB ஜோடிகள் ஒளிபரப்பானது. இதில் நடிகர் நகுலுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் சிறப்பு நடுவராக பங்கேற்றிருந்தார்.

இதனை அடுத்து, நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தொடங்கினார். முன்னதாக வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தோன்றிய கமல்ஹாசன், தன் உடல்நிலை காரணமாக தனக்கு ஒரு தோழி உதவி செய்வதாகக் கூறி, நடிகை ரம்யா கிருஷ்ணனை பிக்பாஸ் தொகுப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

இதனை அடுத்து, ரம்யா கிருஷ்ணன் சனிக்கிழமை தொகுத்து வழங்கினார். இதேபோல் ஞாயிறு அன்று ப்ரோமோவும் வந்தது. இதில் எவிக்‌ஷன் குறித்து ரம்யா கிருஷ்ணன் பேசியுள்ளார்.

இந்நிலையில் அந்த ப்ரோமோவில் தோன்றும் ரம்யா கிருஷ்ணன், நமக்கு தான் சண்டே என்பது fun day.. ஆனா அவங்களுக்கு டென்ஷன் டே!.. இந்த வாரம் எலிமினேஷன் இருக்கா? எலிமினேஷன் இந்த வாரம் இருக்காது சில வதந்திகள் வருது. ஆனா எவிக்‌ஷன் கண்டிப்பா இருக்கு?” என்று சொல்லி எலிமினேஷனை அறிவிப்பது போன்று கார்டை எடுக்கிறார்.

யாரை எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளராக அறிவிக்கப்போகிறார் என்கிற பரபரப்பில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Is there elimination biggboss ramya krishnans first sunday

People looking for online information on கமல்ஹாசன், பிக்பாஸ், பிக்பாஸ் ரம்யா கிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன் will find this news story useful.