"REAL WINNER துணிவு -ஆ ..?.." "ரிலீஸ்க்கு முன்னாடியே சொல்லிட்டேன்" - மனம் திறந்த H. வினோத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

Advertising
>
Advertising

Also Read | குட் நியூஸ் சொன்ன துணிவு பட வில்லன் ஜான் கொக்கன்.. நடிகை பிக்பாஸ் பூஜா கர்ப்பம்!

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் H. வினோத் Fans Festival என்ற நிகழ்ச்சியில் இயக்குனர் வினோத் கலந்து கொண்டார். அப்போது  துணிவு படம் குறித்து பல கேள்விகளுக்கு வினோத் பதில் அளித்துள்ளார்.

குறிப்பாக, "Real Winner துணிவு" குறித்த கேள்விக்கு பதில் அளித்த வினோத், "இந்த பொங்கல் ரிலீஸ் குறித்து நான் படங்களின் வெளியீட்டுக்கு முன் கொடுத்த பேட்டியில் சொன்னது தான். இரண்டு படங்களும் ஜெயிக்கனும். Happy Ending-னு எதிர் பார்த்தேன். அது நடந்திருக்கு. எனக்கு வந்த செய்திபடி இரண்டு படங்களும் நல்லா ஓடிட்டு இருக்கு". என வினோத் பதில் அளித்துள்ளார்.

Also Read | "துணிவு, சிவகார்த்திகேயன் நடித்திருந்தால்.. இந்த விஷயத்தை சேத்துருப்பேன்".. H. வினோத் EXCLUSIVE!

"REAL WINNER துணிவு -ஆ ..?.." "ரிலீஸ்க்கு முன்னாடியே சொல்லிட்டேன்" - மனம் திறந்த H. வினோத்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Is real winner Thunivu here is Director H Vinoth answers

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Thunivu, Vijay will find this news story useful.