மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'த்ரிஷ்யம்' என்ற வெற்றிப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .பின்னர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது, 'த்ரிஷ்யம்' படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம், அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 19-ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ள நிலையில், தமிழிலும் இதே மாதிரி இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் மீது தான் அனைத்து கண்களும் உள்ளன.
இந்நிலையில் பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷ்யம் படத்தில் கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாபநாசம் 2 குறித்து பேசிய இயக்குனர் ஜீத்து ஜோசப், "இது எல்லாம் த்ரிஷ்யம் 2வின் வெற்றியை பொறுத்தது, இந்த முடிவு கமல்ஹாசன் சாரிடமிருந்து தான் வரவேண்டும். பாபநாசம் இரண்டாம் பாகத்தை பற்றி அவர் யோசிப்பார் என்று நம்புகிறேன். அந்த அழைப்புக்காக நானும் காத்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கமல்ஹாசன் குழுவினருடன் Behindwoods நிறுவனம் பேசியபோது, "அதை தீர்க்கமாக மறுத்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை" என்று கூறியுள்ளனர்.