"வாழ்க்கையே ஒரு BIGGBOSS தான்".. BB5-ல் இணையுறீங்களா? ரசிகரின் கேள்விக்கு இளம் நடிகரின் தெறி பதில்! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபல ரியாலிட்டி ஷோவான விஜய் டிவி பிக் பாஸ் தமிழ் சீசன் 5 பற்றிய தகவல்கள் நேற்று (ஆகஸ்ட் 31) வெளியானது.

முற்றிலும் புதிய வண்ணத்தில், செம்மயான ஒரு லோகோவை கொண்டு வெளியிடப்பட்ட இந்த தகவல்படி, கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

அதுமட்டுமின்றி, விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில் இணையப்போகும் பிரபல இளம் நடிகர் பற்றிய பேச்சுகளும் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. அதற்கு அந்த நடிகரே நேரலையில் பதில் கூறியுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.

குறிப்பாக இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான கனி, சுனிதா உள்ளிட்டோரும், இவர்களைத் தொடர்ந்து யூடியூப் பிரபலமான ஜிபி முத்து, பிராதாயினி (பிக் பாஸ் 4 புகழ் சம்யுக்தா கார்த்திக்கின் சிறந்த தோழி), மிலா (நடிகை ஷகீலாவின் மகள்), ‘துள்ளுவதோ இளமை’ புகழ் அபிநய், வடிவுக்கரசி, ஐஸ்வர்யா, '90 எம்எல்' மசூம் சங்கர், 'விஜய் டிவி' அலுவலகத்தை சேர்ந்த சுசேன் ஜார்ஜ் உள்ளிட்டோர் இணைவார்கள் என பேசப்பட்டு வந்தது.

இதனிடையே நடிகர் மகேந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைகிறாரா? என ரசிகர்கள் அவரிடம் நேரலையில் கேட்டுள்ளனர். சுமார் 3 வயதிலிருந்தே கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘மாஸ்டர்’ மகேந்திரன், ஆறு மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்து அசத்தியிருந்தார். 

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் அவர் எண்ட்ரி கொடுப்பாரா?  என்பது பற்றி  ரசிகர்கள் கேட்டபோது ரசிகர்களுடனான அந்த இன்ஸ்டாகிராம் நேரலை உரையாடலில் பேசிய அவர், விஜய் டிவி ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சீசன் 5-ல்  பங்கேற்கும் எந்த திட்டமும் தனக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக, “வாழ்க்கையே ஒரு பிக்பாஸ் தான்.. திருப்பி உள்ள வேற போகணுமா?” என ஜாலியாக பதில் கூறி தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி பற்றியும் இன்னும் பல விஷயங்கள் பற்றியும் மகேந்திரன் பேசியுள்ள முழு கணொளியையும் இணைப்பில் காணலாம்.

"வாழ்க்கையே ஒரு BIGGBOSS தான்".. BB5-ல் இணையுறீங்களா? ரசிகரின் கேள்விக்கு இளம் நடிகரின் தெறி பதில்! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Is master mahendran in biggbosstamil5 his explanation video

People looking for online information on Mahendran, Master, Master Mahendran, Vijay, Vijay Sethupathi will find this news story useful.