"என்ன?.. பிக்பாஸ் 5ல் இந்த குக் வித் கோமாளி பிரபலமா?" .. இது மட்டும் நடந்தா சரவெடி தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கின்றன.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமல்லாமல், தமிழ் தொலைக் காட்சிகளுள் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானதாக விளங்குகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். 4வது சீசனில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார்.

இந்த நிலையில்தான் பிக்பாஸ் 5 வது சீசனின் புரோமோ அண்மையில் வெளியானது. இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவது யார் யார்? என்பது குறித்த பல்வேறு பேச்சுகள் ரசிகர்களிடையே எழுந்து வந்தன.

குறிப்பாக விஜய் டிவி விஜே பிரியங்கா, அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதை மா.கா.பா. ஆனந்த் மட்டுமே தொகுத்து வழங்கினார் என்பதால், விஜே பிரியங்கா, பிக்பாஸில் பங்கேற்பதற்காக குவாரண்டைனில் இருக்கக்கூடும் என்று பேசப்பட்டு வருகிறது.

இதேபோல் செம்பருத்தி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை பிரியா ராமனும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரும் செம்பருத்தி சீரியலில் தன்னுடைய பகுதிகளை முடித்துவிட்டு குவாரண்டைனில் இருப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையே யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என பேசப்பட்டு வந்தபோது, அவரே வீடியோ மூலமாக, பிக்பாஸில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும், தன் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்தும், செல்போன் இல்லாமலும் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில்தான் பிரபல நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் விஜய் டிவி காமெடி பிரபலமான மதுரை முத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் பேச்சுகள் எழுந்து வருகின்றன. தனக்கே உண்டான நையாண்டி மொழியில் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் கருத்துக்களை கூறும் மதுரை முத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தம்முடைய காமெடி கவுண்ட்டர்களால் ரசிகர்களை அள்ளினார்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பின்னர் தொடர்ந்து வாரவாரம் விருந்தினராக வரத் தொடங்கிய மதுரை முத்து வியக்க வைக்கும் மற்றும் சிரிக்க வைக்கும் ஸ்பாட் கவுண்ட்டர்களை தெறிக்க விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பரபரப்பு!!.. "கபோர்ட்ல ஒளிஞ்சுகிட்டேன்!".. துப்பாக்கி முனையில் நடிகையிடம் ரூ.7 லட்சம் கொள்ளை!!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Is madurai muthu in BiggBossTamil5 பிக்பாஸ் 5ல் மதுரை முத்துவா?

People looking for online information on Biggboss, BiggBoss5, BiggBossTamil5, GP MUTHU, Madurai Muthu, Trending, VijayTelevision will find this news story useful.