தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கர்ணன் படத்தின் 'கண்டா வர சொல்லுங்க', 'பண்டாரத்தி புராணம்', 'உட்றாதீங்க யப்போ' போன்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல்களை பார்க்கும் போது அசுரனுக்கு இணையான அசுரனை இந்த படத்தில் பார்க்க போகிறோம் என்பது மட்டும் உறுதி.
இந்நிலையில் முன்னதாக கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. இதனிடையே தேர்தல் தேதிகள் மாற்றி வைக்கப்பட்டதாலும், ஊரடங்கு கடைபிடிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருவதாலும் ஒருவேளை கர்ணன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது கர்ணன் குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தினர். முன்னதாக அறிவிக்கப்பட்டபடியே ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் கர்ணன் திரைப்படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ அரசு இன்று கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செய்யப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கர்ணன் திரைப்படம் வெளியாகுமா என ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இதனையடுத்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "முன்பு கூறியபடியே கர்ணன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாவது உறுதி. அரசாங்கத்தின் வழிநடத்தலின் பேரில் கர்ணன் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளுடனும், முறையான பாதுகாப்பு வசதிகளுடனும் வெளியாகும். அனைவரும் கர்ணன் திரைப்படத்துக்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.