என்னது? திரும்பவும் கண்ணம்மா கர்ப்பமா? பரபரப்பு திருப்பம்? வைரல் வீடியோ! BHARATHI KANNAMMA

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television: விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களுள் ஒன்று பாரதி கண்ணம்மா.

Advertising
>
Advertising

Bharathi Kannamma: இதில் நாயகன் பாரதி, கண்ணம்மாவை சந்தேகப்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கு வெண்பாவின் சூழ்ச்சி முக்கிய காரணம். இந்த நிலையில் பாரதி, கோர்ட்டில் கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முயற்சி செய்தார். ஆனால் கோர்ட்டில் கண்ணம்மாவும் பாரதியும் ஆறுமாத காலம் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என தீர்ப்பளித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

பாரதி குடும்பத்தில் குழந்தைகள்

இதனால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கண்ணம்மாவில் வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இதில் பாரதி, கண்ணம்மாவோடு வேண்டா வெறுப்பாகவே வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்குமான குழந்தைகள் இருவருமே பாரதியின் வீட்டில் பாரதியின் தாய், தந்தையருடன், அதாவது குழந்தைகள் இருவரும் தங்கள் தாத்தா, பாட்டி, சித்தப்பா அகிலன், சித்தி அஞ்சலி, அஞ்சலிக்கு பிறந்த பச்சிளம் குழந்தை ஆகியோருடன் வசித்து வருகின்றனர்.

 

BiggBoss: "ஜெயிக்க வாய்ப்பில்ல.. பண பொட்டிய எடுத்து போறேன்!".. அமீர் அந்தர் பல்டி!

பாரதி, கண்ணம்மா, குழந்தைகள்

இதில் பாரதி, ஹேமா தன் குழந்தை என்று தெரியாமல், தத்துக் குழந்தை என நினைத்து வளர்த்து வருகிறார். இதேபோல் கண்ணம்மாவிடம் வளரும் லஷ்மி எனும் குழந்தையை தன் குழந்தை என பாரதி ஏற்கவும் மறுக்கிறார். கண்ணம்மாவுக்கோ, மிக அண்மையில் தான், ஹேமா தன் குழந்தை என்பது தெரியும்.

கண்ணம்மா கர்ப்பமா?

இந்த நிலையில் கண்ணம்மா மற்றும் அவரது மகள் ஹேமா ஆகிய இருவரும் நடனம் ஆடியபடி ஒரு வீடியோவை, கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் கண்ணம்மா கர்ப்பமாக இருப்பது போன்று தெரிகிறது. இதேபோல் வெளியான மற்றொரு வீடியோவில் கண்ணம்மாவின் கர்ப்பமாக இருக்கும் வயிற்றில் லட்சுமியும் ஹேமாவும் மாறி மாறி முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

 

போட்டியாளரின் திடீர் முடிவு! பேசியே மனசை மாத்திட்டாரா அமீர்.. 'தலைவன்' நிரூப்பின் Strategy-ஆ?

எப்படி சாத்தியம்?

இதனால் மீண்டும் இந்த சீரியலில் கண்ணம்மா கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர். பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே சண்டை நிலவி வருகின்ற நிலையில், கண்ணமாவின் கர்ப்பம் எப்படி சாத்தியம்? இது கண்ணம்மாவின் கனவா?? இல்லை உண்மையில் சீரியலில் வரும் காட்சியா? என அனைவரும் எதிர்வரும் சீரியலின் எபிசோடுகளை எதிர்நோக்கி இருக்கின்றனர்.

என்னது? திரும்பவும் கண்ணம்மா கர்ப்பமா? பரபரப்பு திருப்பம்? வைரல் வீடியோ! BHARATHI KANNAMMA வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Is Kannamma pregnant bharathi Kannamma twist viral video

People looking for online information on Bharathi kannamma promo, Bharathi Kannamma today, Bharathi kannamma today episode will find this news story useful.