பாரதி கண்ணம்மா முடியுதா..? குறுக்க இந்த கௌஷிக் (2வது சீசன்) வந்தா? இயக்குநர் சொல்வது என்ன? BHARATHI KANNAMMA

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு குடும்பத்தினரையும், கண்ணம்மா உட்பட யாரையும் அண்மையில் அடையாளம் தெரியாமல் போனது.

Advertising
>
Advertising

                                       Image Crdit : Vijay Television

Also Read | "சீதாராமம் பார்ட் - 2 வருமா?".. ரசிகரின் கேள்விக்கு துல்கர் சல்மான் கொடுத்த கலகல பதில்..!

அதன் பின்னர் மருத்துவர் பாரதியின் ஆழ்மனதில் கண்ணம்மா பெயர் ஆழமாக பதிந்திருக்கிறது, ஆனால் கண்ணம்மாவை நேரில் பார்க்கும்போது அவருக்கு யார் என்று தெரியவில்லை, எனினும் பாரதிக்கு பழைய நினைவுகள் வரவேண்டும் என்றால் கண்ணம்மா தான் உதவி செய்ய வேண்டும் மீண்டும், அவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும், கண்ணம்மா பாரதியுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். முடிந்தால் பாரதியின் பழைய நாட்களுக்கு, அதாவது கண்ணம்மாவை பாரதி காதலித்த நாட்களுக்கு சென்று பழைய காட்சிகளை மீண்டும் ரீகிரியேட் செய்தால், பாரதியின் பழைய எல்லா நினைவுகளும் அவருக்கு நினைவுக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூற அதற்கு கண்ணம்மாவோ தன்னால் முடியாது என முதலில் கூறுகிறார்.

Image Crdit : Vijay Television

பிறகு அனைவரும் கெஞ்சியதால் இதற்கு கண்ணம்மா சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வெளியான புதிய ப்ரோமோவில் பாரதிக்கு பழைய நினைவுகளை கொண்டு வருவதற்காக கண்ணம்மா பழைய நாட்களில் இருந்தது போலவே பாவாடை தாவணி கட்டிக்கொண்டு, சில பெண்களுடன் குளத்தங்கரையில் உள்ள படிக்கட்டுகளில் கையில் விளக்குகளை ஏந்தி கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி வந்து குளத்தில் விளக்குகளை விடுகிறார். அந்த ஆற்றங்கரை படிக்கட்டில் பாரதி அமர்ந்திருக்கிறார். கண்ணம்மா விளக்கை குளத்தில் விட்டு விட்டு படிக்கட்டு ஏறி வரும்போது பாரதி கண்ணம்மாவை பார்க்கிறார்.

Image Crdit : Vijay Television

கண்ணம்மாவும் பாரதியை பார்க்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் குளக்கரையில் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். இதனை தொடர்ந்து பாரதிக்கு அனைத்தும் நினைவுக்கு வருகிறது. ஆனாலும் கண்ணம்மாவின் மனம் மாறுவதற்காக அனைவரும் காத்திருந்தனர். ஒரு வழியாக மீண்டு வந்த பாரதியை கண்ணம்மா ஏற்றுக்கொண்டு தானும் அவருடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததை அடுத்து, விவாகரத்தான இவர்களுக்கு திரும்பவும் திருமணம் செய்ய அனைவரும் ஆலோசிக்கின்றனர். இதற்கு பாரதி & கண்ணம்மா இருவருமே சம்மதிக்கின்றனர்.

Image Crdit : Vijay Television

இந்நிலையில் இந்த திருமண விசேஷத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, பிக்பாஸ் சினேகன், சீரியல் நடிகை கன்னிகா, பிக்பாஸ் 6வது சீசனில் புகழ்பெற்ற ஷிவின் கணேசன், பிக்பாஸ் முந்தைய சீசன் போட்டியாளரும் பாரதி கண்ணம்மாவில் ஒரு கேரக்டருமான தாமரை செல்வி ஆகியோர்  கலந்துகொள்ளும் ஃபோட்டோக்களும் வீடியோவும் வைரலாகி வருகின்றன. இதேபோல் இத்துடன் இந்த சீரியலின் முதல் சீசன் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா 2வது சீசன் என்ன பண்ணலாம் என அந்த சீரியலின் இயக்குநராஜ பிரவீன் பென்னட் போஸ்ட் போட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாரதி கண்ணம்மா 2வது சீசனை எப்படி எடுத்துச் செல்ல போகிறீர்கள்?  யார் நடிக்கிறார்கள் என்றெல்லாம் பேசி வருகின்றனர்.  இதே போல் பாரதியும் கண்ணம்மாவும் இருவரும் 3வது குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் பேசுகின்றனர். அதனால் பாரதி கண்ணம்மா 2வது சீசன் இவர்களின் 3வது குழந்தையை அடிப்படையாக வைத்து உருவாகுமா என பல கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளன.

Also Read | மகேஷ் பாபு நடிக்கும் 'SSMB28'.. மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்ட OTT உரிமம்.. இத்தனை கோடி ரூபாயா!

தொடர்புடைய இணைப்புகள்

Is Bharathi Kannamma season 2 coming director viral post

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma New Promo, Bharathi kannamma today episode will find this news story useful.