நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் மற்றும் பாலாஜி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் எதிர்த்துப் போராடிய பாலாஜி, பின்பு அவர் பக்கமாக வந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சுரேஷை எதிர்த்து நிற்பதற்காக அவர் சனத்திற்கு வாதாடியது எப்படிப்பட்ட யுக்தி என்று தெரியவில்லை. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் சம்யுக்தா மற்றும் ஆரி இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது.
