ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. இதில் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இனிப்பு கடைகளை வைத்திருக்கின்றனர். இவற்றுக்கான தயாரிப்பு பண்டங்களை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.
இதில் போட்டியாளர்கள் சிலர் இரண்டு கம்பெனிகளிலும் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் அசீம் இருக்கும் கம்பெனியில் அசீம்க்கு பதில் தன்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள சொல்லி ராபர்ட் பேசியது வைரலாகி உள்ளது.
அதன்படி, “ஒரு கடையில் அனைவரும் ஹேப்பியாக இருக்கின்றனர். இன்னொரு கடையை கிராஸ் பண்ணி போனால், டமால் டுமீல் என வெடிக்கிறது, சரி என்ன என காதை கொடுத்து கேட்டால், அசீம், அசீம் என சொல்கிறார்கள்.. அவர் என்ன அவ்வளவு பெரிய ரவுடியா? எனக்கு புரியல ? என் கோரிக்கை அவர் இடத்துக்கு அந்த கம்பெனிக்கு நான் வரவேண்டும் என்பதுதான், அப்போது தான் யாரு ரவுடி.. யாரு லோலாயி என தெரியும்” என்று ராபர்ட் மாஸ்டர் பேசினார்.
இதை கேட்டதும் கூடியிருந்த அனைவருமே, ‘வர்லாம்.. வர்லாம்.. வாங்க மாஸ்டர்’ என கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அசீமுமே ராபர்ட் மாஸ்டரின் இந்த பேச்சை ரசித்து சிரித்து கேட்டுக்கொண்டிருந்தார்.