ட்விட்டரில் இணைந்தாரா பிரபல நகைச்சுவை நடிகர் ஜனகராஜ்? உண்மையை உடைக்கும் இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்த் திரை உலகில் 70 களில் இருந்து நகைச்சுவை நடிகராக நடிக்கத் தொடங்கியவர் ஜனகராஜ்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஜனகராஜ். ஒரு பன்முக வேடங்கள் புரியும் கலைஞர் என்று ஜனகராஜை சொல்லலாம். தனக்கே உரிய பேச்சும் தன்னுடைய உடல்மொழியும் கொண்டு அவர் நடிக்கும் பாங்கு அவருக்கு உண்டான தனித்துவத்தை அடையாளம் காட்டியது.

எழுபதுகளில் உருவான புதிய அலைகள் சினிமா தொடங்கி கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நண்பராக பல படங்களில் நடித்து வந்தவர் ஜனகராஜ்.

அண்மையில் செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் வரும் முக்கியமான ஒரு பாடலான ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்கிற பாடல் ஜனகராஜ் பிரபல படத்தில் செய்த நகைச்சுவை காட்சியின் வெளிப்பாடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பலவிதமான ரிமார்க்கபிள் பஞ்ச் வசனங்களிலும் நகைச்சுவை காட்சிகளிலும் சீரியஸ் திரைப்படங்களில் சீரியஸ் ரோல்களிலும் ஜனகராஜ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 66 வயதான ஜனகராஜ் தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடித்திருந்ததை நம்மால் நினைவில் கொள்ள முடிகிறது.

இந்த நிலையில் தான் அவர் தற்போது ட்விட்டரில் கணக்கு தொடங்கியிருப்பதாக ஒரு தகவல் ஊடகங்களில் வெளியானது. அத்துடன் நடிகர் ஜனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் இந்த ட்விட்டர் கணக்கை தொடங்கி இணைந்துள்ளதாகவும் அந்த ஐடியின் ட்வீட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

எனினும் பலருக்கும் இது உண்மையில் ஜனகராஜின் ட்விட்டர் ஐடி தானா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை பற்றி ஜனகராஜ் அண்மையில் நடித்திருந்த தாதா 87 திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ G என்பவர் நம்மிடையே பகிர்ந்த தகவலின்படி, உண்மையில் அது நடிகர் ஜனகராஜ் அவர்கள் தொடங்கிய அவரது ட்விட்டர் கணக்கு இல்லை என்றும், இந்த தகவலை ஜனகராஜின் மகனிடமே தான் உறுதி செய்துவிட்டதாகவும், அண்மையில் ஜனகராஜின் ட்விட்டர் அக்கவுண்ட் என்கிற பெயரில் தொடங்கப்பட்டு ட்வீட் போடப்பட்ட அந்த ட்விட்டர் கணக்கு ஜனகராஜுடையதே கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் ரசிகர்கள் பலரும், சம்மந்தப்பட்ட அந்த ட்விட்டர் கணக்கின் கீழே சென்று, நேரடியாகவே இது ஜனகராஜின் ட்விட்டர் ஐடி அல்ல, யாரோ அவரது பெயரில் இந்த ஃபேக் ஐடியினை உருவாக்கியுள்ளார்கள். தேவையான ஃபாலோயர்களை உருவாக்கிக் கொண்டு பின்னர் சொந்த பெயரை மாற்றி வைத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ: அதிர்ச்சி!!! ஆண்டி இந்தியன் பட கலைஞர் திடீர் மரணம்! ப்ளூ சட்டை மாறன் இரங்கல்!

Is Actor Janagaraj started new twitter id from his birthday

People looking for online information on Actor, Janagaraj will find this news story useful.