மறைந்த கணவரைப் பற்றி எமோஷனலாக ஃபேஸ்புக்கில் எழுதிய நடிகர் இர்ஃபான் கானின் மனைவி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த மாதம் ஏப்ரல் 29-ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார். கேன்சரால் பாதிப்படைந்திருந்த அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி தனது 54-வது வயதில் இறந்தார். அவரது மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்தது.

Advertising
Advertising

இந்நிலையில் தன் கணவரைப் பற்றி சுதாபா சிக்தர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதினார். அதில் அவர் பிரபல கவிஞர் ரூமியின் வரிகளைக் குறிப்பிட்டிருந்தார்,  ‘சரி தவறு போன்றவற்றுக்கு அப்பால் ஒரு வெளி உள்ளது. காலம் கனியட்டும்...அங்கு உங்களை சந்திப்பேன். உலகம் நிரம்பும் அளவுக்கு உங்களிடம் பேசுவதற்கு நிறைய உள்ளது, மீண்டும் சந்திக்கும்போது பேசுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்

Irfan Khan wife writes an emotional note in facebook about him

People looking for online information on Covid 19, Facebook, Irfan will find this news story useful.