பிரபல OTT-யில் ரிலீஸாகும் இரவின் நிழல்.. எப்போ? பார்த்திபன் கொடுத்த OFFICIAL அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்' திரைப்படம் பிரபல ஒடிடியில் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Thunivu : அஜித்தின் துணிவு .. நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த சூப்பர் அப்டேட்.. வைரல் Pic!!

இயக்குனர் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில்  வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மற்றும் ‘ஒத்த செருப்பு’ ஆகிய  திரைப்படங்கள் பரவலாகக் கவனத்தைப் பெற்றன.

'ஒத்த செருப்பு' படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் நடித்து இயக்கிய திரைப்படம் 'இரவின் நிழல்'.

நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் 'நந்து' எனும் சினிமா பைனான்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தினை பார்த்திபனின் அகிரா பிலிம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ்  தயாரித்தது. இப்படத்தில் பார்த்திபன் நாயகனாக நடிக்க, ரோபோ ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சகா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்தனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்தார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்தார்.

கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கலைப்புலி தாணு கைப்பற்றி படத்தை ரிலீஸ் செய்தார்.

அத்துடன் இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், "காலை வணக்கம்!
அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும் ! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்!
நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!!" என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

Also Read | அசீமா? அசலா?.. இந்த வாரம் Elimination இவர் தான்.. பல ட்விஸ்ட்களுக்கு பிறகு அறிவிச்ச கமல்!!

தொடர்புடைய இணைப்புகள்

Iravin Nizhal Movie Releasing on Amazon Prime Video OTT

People looking for online information on Amazon Prime Video, Iravin nizhal, OTT Release, R parthiban will find this news story useful.