பார்த்திபன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இரவின் நிழல் திரைபடம் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
Also Read | #VIKRAM: கமல் Fans-க்கு டபுள் Treat.. ஒரே நாளில் ஆடியோ & டிரைலர்… தெறி அப்டேட்..
முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம்…
தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இயக்குனர் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் அடுத்த வித்தியாச முயற்சியாக ஒரே ஷாட்டில் உருவாகும் படமாக ’இரவின் நிழல்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் இந்த படத்தைக் காண ஆவலாக உள்ளனர். ஒரே ஷாட் படங்களிலேயே வித்தியாசமான படமாக இது ஒரு நான் லீனியர் படமாக அமைந்துள்ளது. உலகின் முதல் single shot நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இந்நிலையில் ஒரே ஷாட்டில் இந்த படத்தைப் படமாக்க படக்குழுவினர் மேற்கொண்ட சவால்கள் மற்றும் எப்படி படத்தை படமாக்கினார்கள் என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
64 ஏக்கரில் 50 செட்கள்…
நான்லீனியர் கதை என்பதால் ஒரே இடத்தில் வெவ்வேறு இடத்தில் நடக்கும் கதைகளுக்காக ஏற்ப 64 ஏக்கரில் 50 அரங்குகளில் செட் அமைக்கப்பட்டது. அதே மாதிரி ஒவ்வொரு அரங்கிலும் வெயில், மழை என வானிலையும் மாற்றி அமைக்கப்பட்டது.
குழந்தை நட்சத்திரங்களுக்காக ஸ்பெஷல் கவனம்…
பெரியவர்களுடன் குழந்தைகள், மற்றும் மிருகங்களும் நடித்துள்ளனர். இவர்களின் காட்சிகளுக்கும் ஒத்திகையின் போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமயோஜிதமாக முடிவெடுப்பது இந்த நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். உதாரணமாக ஒரு காட்சியில் கேஷியர் இயந்திரம் வேலை செய்யவில்லை, அப்பொழுது உடனடியாக சிந்தித்து அந்த காட்சி வேறு மாதிரி அமைக்கப்பட்டது.
கேமராவும் போகஸ் பிரச்சனைகளும்…
படத்தில் உபயோகப்படுத்திய கேமரா கூட உடனடியாக முடிவு செய்யப்படவில்லை. பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் கேமராவை பயன்படுத்திய பிறகு அதில் உள்ள கஷ்டங்களை புரிந்து கொண்டு ஜிம்பல் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று நிமிட காட்சிக்கே ஃபோகஸ் ஷிப்ட் செய்வது மிகவும் கடினமானதாகும். ஆனால் இரவின் நிழல் படக்குழுவினர் குறுகிய சந்துகள் மற்றும் மூலைகளில் எடுக்கப்பட்ட 100 நிமிடங்கள் & 19 செகண்ட் காட்சியை ஃபோகஸ் ஷிப்ட் செய்துள்ளனர்.
60 ஆண்டுகளைப் பிரதிபலிக்கும் செட்கள்…
ஒரு கதாபாத்திரத்தின் 60 ஆண்டு வாழக்கையை பிரதிபலிப்பதற்கு செட் அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு காலகட்டத்தையும் கச்சிதமாக காட்டும் வகையில் இந்த செட்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்க வேண்டும் என்பது உட்பட அனைத்திற்கும் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒத்திகையில் இருந்தது போலவே காட்சியமைப்பு கட்சிதமாக உருவாக்கப்பட்டது.
படத்தில் பணியாற்றிய ஆஸ்கர் கலைஞர்கள்…
ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசைமைத்துள்ளது மிக பெரிய பலமாகும். படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களை ஒரே கோர்வையில் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் விருது வென்ற கோட்டலாங்கோ லியோன் VFX பணிகளை செய்துள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற கிரேக் மான் ஒலி அமைப்பு மேற்பார்வை பணிகளை செய்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8