பாரதிராஜாவின் கண்டனம்.. பதிலுக்கு 'இரண்டாம் குத்து' இயக்குநர் வெளியிட்ட பாரதிராஜா பட போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரதிராஜா வெளியிட்ட கண்டனத்துக்கு, இரண்டாம் குத்து இயக்குநர் ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார். 

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் இரண்டாம் குத்து. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் அடுத்தப்பாகமாக இது உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதற்கு இயக்குநர் பாரதிராஜா கடுமையான கண்டனத்தை முன் வைத்தார். 

இந்நிலையில் தற்போது இயக்குநர் சந்தோஷ் பாரதிராஜாவின் கண்டனத்துக்கு பதில் கொடுத்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான டிக் டிக் டிக் படத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள அவர், ''அவர் மீது இருக்கும் மரியாதையுடன் சொல்கிறேன். 1981-ல் டிக் டிக் டிக் படத்தின் இந்த போட்டோவை பார்க்கும் போது, கூசாத கண்கள் இப்போது கூசிடுச்சோ'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

பாரதிராஜாவுக்கு சந்தோஷ் பதில் | Irandam kuthu director santhosh jayakumar reply to bharathiraja

People looking for online information on Bharathiraja, Irandam Kuthu First Look, Santhosh Peter Jayakumar will find this news story useful.