சரத்குமார் - ஜிப்ரான்.. க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்.. வேற லெவல் டைட்டில்! இயக்குநர் இவரா? TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கிய அதே நிலையில், தமிழிலும் வெப் சீரிஸ்களுக்கான நல்ல வரவேற்பு இருப்பதை காணமுடிகிறது.

Irai Sarathkumar Webseries ghibran radaan media Rajesh M Selva

இந்த நிலையில்தான் தற்போது ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா வொர்க்ஸ் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸ்க்கான பூஜையுடன் தொடங்கிய, புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ராதிகா சரத்குமாரின் Radaan Mediawoks நிறுவனம், கடந்த பல வருடங்களாக தமிழக பொழுதுபோக்கு துறையில், பல அரிய சாதனைகளை பல்வேறு தளங்களில் நிகழ்த்தி காட்டியிருக்கிறது. குடும்ப பெண்கள் கொண்டாடும் தொலைக்காட்சி சீரியல்களில் தொடங்கி, டெலிஃபிலிம் மற்றும் முழு நீள திரைப்படங்கள் வரை பல வெற்றிகரமான படைப்புகளை தயாரித்து வழங்கியுள்ளது.

Irai Sarathkumar Webseries ghibran radaan media Rajesh M Selva

பல வெற்றிகளை தொடர்ச்சியாக சாத்தியமாக்கிய இந்நிறுவனம் தற்போது OTT தளத்தில்  “இரை” எனும் வெப் சீரிஸ் மூலம் தன் புதிய பயணத்தை துவக்கியுள்ளது. இந்த தொடரில் நடிகர் சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று ( ஜூலை 5,2021), படக்குழுவினர் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது.

“தூங்காவனம், கடாரம் கொண்டான்” திரைப்படப் புகழ்  இயக்குநர் ராஜேஷ் M செல்வா இந்த தொடரினை இயக்குகிறார். ரசிகர்களை இருக்கையின் முனையில் கட்டிப்போடும், பரபர திருப்பங்கள் நிறைந்த க்ரைம் திரில்லராக இந்த இணைய தொடர் உருவாகவுள்ளது.

இந்த இணைய தொடருக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சசி கலை இயக்கம் செய்கிறார். சில்வா மாஸ்டர் சண்டைப்பயிற்சிகளை கவனிக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

ALSO READ: "தளபதியே சொல்லிட்டாரு.. எனக்கு இது போதும்!".. சிவாங்கி ஸ்டைலில் கவின் மகிழ்ச்சி!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Irai Sarathkumar Webseries ghibran radaan media Rajesh M Selva

People looking for online information on Ghibran, Irai, Radhika Sarathkumar, Rajesh M Selva, Sarath Kumar will find this news story useful.