ஐ.பி.எல் போட்டிகளின் டி.வி தொலைக்காட்சி & ஒடிடி டிஜிட்டல் உரிமைகளை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் வென்றது, அதே நேரத்தில் டிஜிட்டல் உரிமைகளை அம்பானியின் Viacom18 நிறுவனம் வென்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அடுத்த ஐந்தாண்டுகளில் உரிமைகளுக்காக மொத்தம் ரூ.44,075 கோடி ரூபாயை திரட்டியுள்ளது.
நான்கு உரிமைகள் & பேக்கேஜ்களின் ஏலத்தை முடித்த பிறகு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் எனேதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்குள்ளான டிவி உரிமையை (பேக்கேஜ் ஏ), டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ரூ. 57.5 கோடிக்கு வென்றது. ஐந்து ஆண்டுகளில் 410 போட்டிகளுக்கு மொத்தம் ரூ.23,575 கோடி ரூபாய் இதன் மதிப்பு ஆகும்.
இந்த ஐந்தாண்டு கால உரிமை ஏலத்தில் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ஒரு போட்டிக்கு கடந்தாண்டு செலுத்திய ரூ.54.5 (மொத்தம்- ரூ.16,347.5) கோடியை விட இந்தாண்டு இரண்டு மடங்கு அதிகமாகும்.
தொகுப்பு B--இந்திய துணைக்கண்ட டிஜிட்டல் உரிமைகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் உள்ள Viacom18 நிறுவனம், ஒரு போட்டிக்கு ரூ.50 கோடி என்ற மதிப்பில் வென்றது, மொத்தம் ரூ.20,500 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் உரிமம் விலை போனது.
2023-2027 காலகட்டத்துக்கு ஒரு போட்டிக்கு ரூ.107.5 கோடிக்கு இந்த உரிமைகள் வாங்கப்பட்டுள்ளது.
டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளுக்கான ரிசர்வ் விலை முறையே ஒரு போட்டிக்கு ரூ.49 கோடி மற்றும் ரூ.33 கோடி ஆகும்.