IPL போட்டியில் கலக்கும் தமிழக வீரர்.. இந்த சூப்பர் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐபிஎஸ் போட்டியில் கலக்கி வரும் தமிழக வீரர் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். 

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி. இவர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தனது சுழற்பந்து வீச்சில் இந்த சீசனை கலக்கி வரும் வருண் ஒரு விஜய் ரசிகர் என தெரிந்து, நெட்டிசன்கள் அண்மையில் இவரை ட்ரெண்ட் அடித்தனர். 

இந்நிலையில் வருண் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்திருப்பது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் ஜீவா, ஶ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த ஜீவா திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். ஜீவா பயிற்சி பெறும் டீமில், சக கிரிக்கெட் வீரராக இவர் சில காட்சிகளிலும் இடம் பெற்றுள்ளார். 

வருண் சக்ரவர்த்தியை ஜீவா திரைப்படத்தில் கவனித்த இணையவாசிகள், அதை வைத்து மீம்ஸ் போட்டு வைரல் அடித்து வருகின்றனர். 

 

IPL போட்டியில் கலக்கும் தமிழக வீரர்.. இந்த சூப்பர் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா..?! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

வருண் சக்ரவர்த்தி நடித்த திரைப்படம் | IPL cricketer varun chakravarthy acted in this tamil movie

People looking for online information on Ipl 2020, Jeeva, Varun Chakravarthy, Vijay, Vishnu Vishal will find this news story useful.