தமிழ்த் திரைத்துறையில் சற்றே மாடர்னான நகைச்சுவை நடிகரான விவேக் தமிழ் சினிமாவில் பண்ணியுள்ள காமெடிகள் முக்கியமானவை.
பல்வேறு காமெடிகளில் விவேக், பல அரிய ஆங்கில வார்த்தைகளை அப்போதே பயன்படுத்தியிருப்பார். விவேக்கின் மறைவு அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, தமிழ் சினிமா மற்றும் சமூகத்துக்கும் பேரிழப்பு என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சமூக அக்கறையையும் பகுத்தறிவையும் தமது காமெடிகளில் விருந்தளித்தவர் விவேக்.
சில காமெடிகளில் விவேக் பழைய பிற்போக்கு சடங்குகளை கலாய்த்திருப்பார். அதேபோல் குழந்தைக்கு அர்த்தமில்லாமல் பெயர் வைக்கும் போக்கையும் கலாய்க்கும் வகையில் 12B படத்தின் காமெடி காட்சியில் மயில்சாமி தனது குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி கேட்க, அதற்கு விவேக் எதார்த்தமாக எக்ஸ்யூஸ் மீ என சொல்ல, அதையே மயில்சாமி நல்லாருக்கே.. இனிமே இதுதான் என் மகனின் பெயர் என சொல்லி பரவசமாகி சென்றுவிடுவார்.
இதே பாணியில் இந்தோனேசியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் வசித்து வரும் Slamet Yoga மற்றும் Ririn Linda தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் பிறந்த ஆண் குழந்தைக்கு, குழந்தையின் தந்தை Yoga, “Department of Stastistical Communication” என்கிற பெயரை வைத்துள்ளார். இதற்கு முக்கியக் காரணம் ஒன்றும் இருக்கிறது.
2009ல் இந்தோனேசிய சிவில் சர்வீஸ் எழுதி அரசு வேலை செய்துவந்த Yoga பின்னர், புள்ளிவிவரத் தகவல் தொடர்புத் துறையில் இணைந்து (Department of Stastistical Communication) பல ஆண்டுகளாக பணிபுரிந்து குடும்பத்தை முன்னேற்றியுள்ளார். இந்த செண்டிமெண்ட் காரணமாக தமது குழந்தைக்கு இந்த பெயர் வைத்துள்ளார். மேலும் தன் மகன் Department of Stastistical Communication பக்தி உள்ளவனாகவும் தன் குடும்பத்தை சிறப்பாக கவனித்துக் கொள்பவனாகவும் வளருவான் என Yoga குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: 'அப்துல் கலாமுடன் விவேக்!'.. 'நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும்' வைரல் புகைப்படம்!