PONNIYIN SELVAN: PS1 டிரெய்லர் விழாவில் இந்தியன் 2 படத்தின் TRIO.. வைரலாகும் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்று லைக்கா புரொடக்ஷன்ஸ்.

Advertising
>
Advertising

தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தை இரு பாகங்களாக தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி) நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்விற்கு இயக்குனர் ஷங்கர் வருகை தந்துள்ளார். கமல்ஹாசன் & சுபாஸ்கரன் அல்லிராஜா அருகில் ஷங்கர் அமர்ந்து இருப்பது போல லைக்கா நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் அமைந்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2  படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு  சில நாட்களுக்கு முன் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Indian2 Movie Trio at Ponniyin Selvan Audio Trailer Launch

People looking for online information on Indian 2, Kamal Haasan, Lyca, Ponniyin Selvan, PS 1, Shankar will find this news story useful.