VIDEO: 'நாங்களும் வந்துட்டோம்ல!'.. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வாத்தி கம்மிங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தி விஜய் , விஜய் சேதிபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

Indian women cricket team dancing vaathi coming viral

விஜய் ரசிகர்களிடையே இந்த படம் வரும் முன்னே, அனிருத் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் பெருமளவில் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு பெரியோர் முதல் சிறிய குழந்தைகள் வரை ஸ்டெப்ஸ்களை போட்டு தெறிக்க விடும் வீடியோக்களை இணையத்தில் காண முடிகிறது. ரசிகர்கள், பொதுமக்கள் மட்டுமல்லாமல், திரை மற்றும் டிஜிட்டல் மீடியா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஸ்டெப்ஸ் போட்டு இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர்.  முன்னதாக அஸ்வின், ஹர்பஜன் சிங் இந்த பாடலுக்கு நடனமாடினர்.

Indian women cricket team dancing vaathi coming viral

இதேபோல் அண்மையில் நடந்த Behindwoods Gold Icons விருது விழாவில் விருது பெற்ற பின்னர் இந்திய கிரிகெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தலயுமான சுரேஷ் ரெய்னா இதே பாடலுக்கு விழா மேடையிலேயே தொகுப்பாளர்களுடன் சேர்ந்து மெலிதாக நடனம் ஆடினார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பெண்கள் டீம் இந்த பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பாடல் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது இந்திய பெண்கள் அணி.

இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைக் கொண்டாடும் வகையில் இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதனை கிரிக்கெட் பிரபலம் வேதா கிருஷ்ணா மூர்த்தி பகிர்ந்துள்ளார். இதில் அகன்ஷா,மமதா, திவா உள்ளிட்டோர் நடனமாடியுள்ளனர். 

ALSO READ: வைரலாகும் அஸ்வினின் ட்வீட்!.. Behindwoods விருது பெற்ற பின் பதிவிட்டது என்ன தெரியுமா?

VIDEO: 'நாங்களும் வந்துட்டோம்ல!'.. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வாத்தி கம்மிங்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Indian women cricket team dancing vaathi coming viral

People looking for online information on Master, Master Tamil, Vaathicoming, Vijay will find this news story useful.