'MONEY HEIST' பிரபலம் வீட்டில் இருந்த புகைப்படம்.. சர்ப்ரைஸ் ஆன இந்தியர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்பெயின் : பிரபல வெப் சீரியஸ் தொடரான 'Money Heist' மூலம் பிரபலமான ஒருவரின் வீட்டில் இருந்த புகைப்படத்தால், இந்தியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர்.

Advertising
>
Advertising

ஸ்பெயின் மொழியில் வெளியாகியிருந்த 'Money Heist' தொடர், பல நாடுகளில் மிகவும் பிரபலம் ஆகியிருந்தது. அதிலும் குறிப்பாக, இந்திய ரசிகர்கள் இந்த தொடர் வெளிவரும் சமயத்திற்காக, பல நாட்கள் காத்துக் கிடந்தனர்.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இருக்கும் இந்த தொடரில் வரும், புரொபசர் கதாபாத்திரத்திற்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. வங்கி ஒன்றில் ஒரு கும்பல் சேர்ந்து கொள்ளை அடிப்பதே இந்த வெப் சீரியஸின் கதைக்களம்.

வலிமை பட விநியோகஸ்தர்கள் சொல்லி வைத்தார் போல் ஒரே மாதிரி சம்பவம்.. குஷியில் அஜித் ரசிகர்கள்!

பரபர கடைசி சீசன்

அந்த குழுவில் வரும் நபர்கள், ஹெல்சின்கி, டோக்கியோ, டென்வர் என பல நாட்டிலுள்ள நகரங்களின் பெயர்களைக் கொண்டு வரும். மொத்தம் ஐந்து சீசன்களாக, வெளிவந்திருந்த இந்த தொடரின் கடைசி சீசன், கடந்த டிசம்பர் மாதம் வெளியாகியிருந்தது. இத்துடன் இந்த தொடர் முடிவடைந்த நிலையில், பலரும் இது முடிவடைந்ததன் காரணமாக சோகமும் அடைந்தனர்.

Money Heist பிரபலம்

இந்நிலையில், இந்த தொடரில் வரும் நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று, தற்போபது அதிகம் வைரலாகி வருகிறது. 'Money Heist' தொடரில், மோனிக்கா என்னும் கதாபாத்திரத்தில் நடிகை எஸ்தர் அசெபோ நடித்திருந்தார். இவரது நடிப்பும் பரவலாக பேசப்பட்டது.

வைரலாகும் புகைப்படம்

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த ஆன்மீகம் குறித்த வீடியோ ஒன்றில், இவரது பின்னணியில், ஹிந்துக் கடவுளான விநாயகரின் படம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்திய புராணங்களில், அதிகம் பேசப்படும் கடவுள் ஒருவரின் புகைப்படம், வெளிநாட்டு நடிகையின் வீட்டில் இடம்பெற்றிருப்பது, இந்தியர்களை அதிகம் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

குஷியில் இந்தியர்கள்

இதன் காரணமாக, பலரும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், 'Money Heist' பிரபலத்தின் வீட்டில் இந்த புகைப்படம் இருந்ததால், அந்த தொடரின் ரசிகர்களும், இது பற்றியான பதிவுகளை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Indian fans spotted ganapathy image in Money heist heroine home

People looking for online information on நெட்ப்ளிக்ஸ், வெப் சீரியஸ், Ganapathy image, Indian fans, Money Heist will find this news story useful.