ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் படம் தர்பார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்

பேட்ட படத்துக்கு சூப்பர் ஸ்டாருடன் அனிருத் இணைவதால் இந்த படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹேமங் பதானி தங்கியிருந்த விடுதியின் லிஃப்ட்டில் தன் அறைக்குச் ரஜினி சென்று கொண்டிருக்கிறார். அப்போது ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
இது குறித்து ஹேமங் பதானி தனது ட்விட்டர் பதிவில், "இந்த 'ரசிகனின்' தருணம் சிறிது நேரத்துக்கு முன்னால் நடந்தது. நான் என் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன் அப்போது லிப்ட் கதவு திறக்கும் போது ஆச்சரியப்பட்டேன் லிப்டிற்க்குள் தலைவன் போல நின்று கொண்டிருந்தார் ரஜினிகாந்த். என்று பதிவிட்டுள்ளார்.