Wedding: திருமணக் கோலத்தில் மணமேடையில் வைத்து, மாப்பிள்ளைக்கு தாலி கட்ட சொல்லிக்கொடுத்த மணப்பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது.
இந்திய திருமணம்
பொதுவாக உலக முழுவதும் திருமணங்கள் ஒரு உடன்படிக்கை, ஒரு ஒப்பந்தம், ஒரு புரிந்துணர்வு என்று வெவ்வேறு விதமான விஷயங்களை பறைசாற்றும் வகையிலான சடங்குகளுடன் நடக்கும். இதில் இந்திய முறையில், குறிப்பாக இந்து திருமணங்களில் பெண்கள் கழுத்தில் தாலி கட்டுவதும், மெட்டி அணிவிப்பதுமான முறைகளில் திருமணங்கள் நடக்கின்றன. அப்படி நடந்த இந்திய முறையிலான திருமணம் ஒன்றில் தான் மாப்பிள்ளைக்கு தாலி கட்ட சொல்லிக்கொடுத்த மணப்பெண்ணின் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
இந்திய முறைப்படி சடங்கு சம்பிரதாயங்களுடன் நடந்த இந்த திருமணத்தில், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் இந்த மணமக்கள் மணமேடையில் அமர்ந்துவிட்டானர். ஆனால் அப்போது வரை மாப்பிளைக்கு ஒரு விஷயம் தெரியாமல் இருந்துள்ள விசயம் அப்போதுதான் மணமகளுக்கு தெரியவருகிறது.
மணமேடையில் பொண்ணு மாப்பிள்ளை
அதற்கு முன்பாக, இந்த திருமணத்தில் மணக்கோலத்தில் இருக்கும் மாப்பிள்ளை மற்றும் மணமகளிடையே ஒரு உரையாடல் நடக்கிறது.. இதை கவனித்த சுற்றி இருந்த உறவினர்கள் கிட்டே நெருங்க, மாப்பிள்ளை எதற்கோ சிரமப்படுகிறார் என்பது, அவருக்கு மணப்பெண் சொல்லிக் கொடுக்கிறார் என்றும் தெரிய வருகிறது.
ஆம், மாப்பிள்ளை அந்த மணப்பெண்ணுக்கு தாலி கட்டுவதற்கு திணறுவதாக புரிந்துகொண்ட மணப்பெண், அந்த இடத்தில் செய்த சம்பவம் தான், அனைவரையும் கவனிக்க வைத்தது. தன் கழுத்தில் எப்படி தாலி கட்டுவது என்று மணமகனுக்கு இஞ்ச் இஞ்சாக அந்த மணமகள் விவரிக்கிறார்.
தாலி கட்ட சொல்லிக்கொடுத்த மணப்பெண்
ஆனாலும், மணப்பெண் அதிகம் பேசியதாக தெரியவில்லை. அவர் பேசியதைவிட, ஆக்ஷன் காட்டி, அதாவது சைகையால் சொல்லிக் கொடுத்ததுதான் அதிகமாக தெரிகிறது. அப்போது மணப்பெண் மற்றும் மணமகனின் அருகில் இருந்தவர்கள் சிலர் மாப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுத்து தாங்களும் உதவ முன்வருகின்றனர்.
ஒருவழியாக மாப்பிள்ளை புரிந்துகொண்டதாக தெரிய மணப்பெண் நிம்மதி அடைகிறார். அதன் பின் மணப்ண்ணின் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டுகிறார். குறிப்பாக மணமகனுக்கு விவரிக்கும்போது அந்த மணப்பெண் 3 என்று தன் விரல்காள் காட்டி ஏதோ பேசுகிறார். அதாவது 3 முடிச்சை அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது.