INDIAN - 2 படத்தில் சித்தார்த் தோற்றம்.. வெளியான செமயான FIRST LOOK போஸ்டர்! வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

Advertising
>
Advertising

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள்.

முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

முந்தைய இந்தியன் 2 ஷூட்டிங் கல்பாக்கம் டச்சுக் கோட்டையில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு, தைவான் நாட்டில் நடைபெற்று வந்தது.  தைவான் நாட்டில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது தென் ஆப்ரிக்காவில் 12 நாட்களுக்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் முழுவீச்சில்  நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இயக்குனர் ஷங்கர், தனது டிவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து தென்னாப்பிரிக்க படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முதல் லுக் போஸ்டரை இந்தியன் 2 படக்குழு வெளியிட்டுள்ளது. தேசிய கொடி குத்தி இருக்கும் உடையில் நடிகர் சித்தார்த் காணப்படுகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Indian 2 Movie Siddharth First Look Poster Released

People looking for online information on Indian2, Kamal, Siddharth will find this news story useful.