கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2.. தென் ஆப்ரிக்காவில் இருந்து ஷங்கர் பகிர்ந்த சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

Advertising
>
Advertising

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள்.

முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

முந்தைய இந்தியன் 2 ஷூட்டிங் கல்பாக்கம் டச்சுக் கோட்டையில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு, தைவான் நாட்டில் நடைபெற்று வந்தது.  தைவான் நாட்டில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது தென் ஆப்ரிக்காவில் 12 நாட்களுக்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் முழுவீச்சில்  நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இயக்குனர் ஷங்கர், தனது டிவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து தென்னாப்பிரிக்க படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Indian 2 Movie Shankar Shared South Africa Shooting Update

People looking for online information on Indian2, Kamal Haasan, Shankar will find this news story useful.