கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. கடந்த மாதம் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து பல்வேறு எந்த அறிவிப்பும் இல்லை.

இதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. மேலும் சூர்யாவின் 'சூரரைப் போற்று' உள்ளிட்ட மிகுந்த எதிர்பார்க்கப்பட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படம் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் ஒன்று பரவி வருகிறது. அந்த தகவல் உண்மையில்லை என்றும் தியேட்டரில் தான் படம் வெளியாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
Tags : Master, Vijay, Vijay Sethupathi, Lokesh Kanagaraj