“இது பிரியங்கா VS இமான்!”.. "IRRITATE பண்றாரு!".. "சரி நீ ஏத்திவிடாத!”.. காரசாரமாய் பேசிய அபிஷேக் & நிரூப்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் காயின் டாஸ்க் ஒருவழியாக களைகட்டி முடிந்துள்ளது. ஆம். காயின் டாஸ்கின் முதல் அத்தியாயம் முடிவு பெற்றுள்ளது.

imman vs priyanka niroop advises abishek not to stimulus

இந்த டாஸ்கில் அவரவரும் நண்பர்களுக்கான காயின்களை எடுத்துக் கொடுத்து உதவினர். சிலர் காயின்களை தங்களுக்காக எடுத்து வைத்துக்கொண்டனர். பஞ்சதந்திரம் என்கிற இந்த டாஸ்க்கில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய கருப்பொருட்களில் தங்களுடன் ஒத்துப்போவது எது? இன்னொருவரை இந்த பஞ்ச பூதங்களில் எவற்றுடன் ஒப்பிடலாம்? ஏன்?  என போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு பேசினர்.

imman vs priyanka niroop advises abishek not to stimulus

இதனை தொடர்ந்து பிரியங்கா மற்றும் அண்ணாச்சி இருவரும் பேசிக் கொள்ளும் பொழுது ஜாலியாக அதேசமயம் முரண்பட்டு பேசிக்கொண்டனர். அண்மைக் காலமாகவே அண்ணாச்சிக்கும் பிரியங்காவுக்குமான சிறு சிறு உரசல்கள் அதிகமாகிக் கொண்டு வந்ததை பார்க்க முடிந்தது.

imman vs priyanka niroop advises abishek not to stimulus

கடைசியாக காயின் டாஸ்கில், அண்ணாச்சி சின்ன பொண்ணுக்கு காயின் கொடுக்கச் சொல்லிக் கேட்டபோது கூட, சின்ன பொண்ணுவை தான்தான் நாமினேட் செய்ததாகவும் எனவே தனக்கு சின்ன பெண்ணை காப்பாற்ற வேண்டாம் என்று தோன்றுகிறது என்றும் பிரியங்கா அண்ணாச்சியிடம் முகத்துக்கு நேரே நேரடியாக சொல்லிவிட்டார்.

தவிர முந்தைய பலூன் வெடித்தல் டாஸ்கில், போட்டியாளர்கள் அவுட் ஆன பின்னும் போட்டியில் ஈடுபடவேண்டாம் என்று அண்ணாச்சி கூறியபோது, அண்ணாச்சிக்கும் அபினய்க்கும் மோதல் வெடித்தது.  இதேபோல் இன்னொரு டாஸ்கில், இசை வாணியின் வாழ்க்கையின் உணர்வுமிக்க துயர சம்பவங்களை குறிப்பிட்டுப் பேசி அவருடைய உணர்வை வெளிக்கொண்டுவர அபிஷேக் முயற்சித்ததற்கு இமான் அண்ணாச்சி கண்டனம் தெரிவித்தார்.

அப்போதும் இமானுக்கும் பிரியங்காவும் சிறு உரசல் இருந்தது. இந்த நிலையில் தற்போது என்னதான் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தாலும் பிரியங்கா மற்றும் இமான் இருவருக்குள்ளும் இருக்கும் முரண்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் காணமுடிகின்றது.

இந்த நிலையில் இவர்கள் பேசிக் கொள்வதை பார்த்த அபிஷேக், “இது அண்ணாச்சி வெர்சஸ் பிரியங்கா என்று போய்க் கொண்டிருக்கிறது. ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்” என்று கூற, நிரூப், “ஆம்.. பிரியங்கா தேவையில்லாமல் பேசுகிறாள். அவளுக்கு அது புரியவில்லை. அது அவளுக்கும் நல்லதல்ல என்பது அவளுக்கு தெரியவில்லை” என்று கூறுகிறார்.

மேலும் பேசிய அபிஷேக், “பிரியங்காவின் ஈகோ ஒருகட்டத்தில் வெடித்தால் அவ்வளவுதான்” என்று சொல்ல, “சரி நீ அவளை ஏற்றி விடாமல் இரு” என்று கூறுகிறார் . அதற்கு அபிஷேக், “டேய் நான் அவளை ஆஃப் பண்ணி தானே வைக்கிறேன்!” என்று கூறுகிறார். எனினும் இதை சரி செய்தாக வேண்டும் என்றும் அபிஷேக் குறிப்பிடுகிறார்.

அத்துடன் இமான் இரிட்டேட் பண்ணுவதாகவும் அதனால்தான் பிரியங்கா இந்த நிலைக்கு செல்வதாகவும் அபிஷேக் குறிப்பிடுகிறார். அப்போது நிரூப்போ, “பிரியங்காவிடம் அவள் செய்வது எல்லாம் சரி என்று சொல்லாமல்.. பிரியங்கா செய்வதை அவளுக்கு புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் அது சரியாகும். அதை நீ ஏற்றி விடாதே” என்று தெளிவாகக் கூறுகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Imman vs priyanka niroop advises abishek not to stimulus

People looking for online information on Abishek, Annachi vs priyanka, BiggBossTamil5, Imman annachi vs priyanka, Niroop, VJ Priyanka will find this news story useful.