"கேப்டன் சொன்னா செஞ்சுதான் ஆகணும்!".. "முடியாது.. என்னய்யா செய்வ?" - முட்டிக்கொண்ட நிரூப் - இமான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி.

Advertising
>
Advertising

பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி அடுத்து தொடங்கியது. இந்த போட்டியில் கடந்த வாரம் பெஸ்ட் பெர்ஃபார்மராக தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக், சிபி மற்றும் இமான் கலந்துகொள்ளவேண்டும். இந்த டாஸ்க் பெயர் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’.

இந்த போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தனித்தனியாக பிளாட்பார்ம் போடப்பட்டிருக்கும். அதில் போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளை எடுத்து தங்களுக்கான பிளாட்பார்மில் பெட்டிகளை சேகரித்து அவர்கள் செங்குத்தாக அடுத்த ஆரம்பிக்க வேண்டும். தங்கள் பெட்டிகளை அடுக்கும் போது மற்றவர்கள் தங்க: பெட்டிகளின் மீது தாக்குதல் நடத்துவார்கள்.

அந்த தாக்குதலை போட்டியாளர்கள் தடுக்க முயற்சிக்க வேண்டும். மேலும் தங்கள் பேச்சு திறமையால் பேசியும் தடுக்க முயற்சிக்க வேண்டும். இதற்கென பிக்பாஸ் வீட்டில் ஒரு சவுண்ட் கேட்கும். அந்த சத்தம் கேட்டதும் தாக்குதலை தொடரவும், நிறுத்தி விடவும் வேண்டும். இந்த தடைகளை எல்லாம் தாண்டி டாஸ்க்கின் முடிவில் யார் பெட்டிகளை உயரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில், அபினய் இப்போட்டியின் நடுவராக இருந்து வெற்றி பெற்ற நபர் யார் என்று அறிவிக்க வேண்டும்.

இதுவே இந்த போட்டி. இந்த போட்டியில் இமான் வெற்றி பெற்றார். ஆனால் தன்னிடம் இருக்கும் காயினை நிரூப் பயன்படுத்த விருப்பம் இருக்கிறதா? என்று நிரூப்பிடம் பிக்பாஸ் கேட்டபோது நிரூப் பிக்பாஸிடம் தன் காயினை பயன்படுத்தப் போவதாக கூறி விட்டார். இதனையடுத்து, இமான் அண்ணாச்சி நிரூப்பை பார்த்து, “நீ பயந்துட்ட டா நிரூப்” என்று குறிப்பிட்டார். அதன்பிறகு இமான் அண்ணாச்சியை நிரூப் சில வேலைகள் சொல்லி அதிகாரம் செய்கிறார்.

ஆனால் இமான் அண்ணாச்சி வேலை செய்ய முடியாது என்று காட்டமாக கூறினார். பதிலுக்கு நிரூப், “இப்படி முடியாது என்றெல்லாம் நீங்கள் சொல்ல முடியாது. நான் சொல்வதை செய்துதான் ஆகவேண்டும்” என்று மீண்டும் கூற, “எல்லா வேலைகளையும் ஒரே ஆளிடம் கொடுத்தால் செய்ய முடியாது. ஹவுஸ் க்ளீனிங், பாத்ரூம் க்ளீனிங், சமையல் என ஏதாவது ஒரு வேலை மட்டும் சொன்னால் செய்வேன்” என்று இமான் அண்ணாச்சி மீண்டும் கூறுகிறார். மேலும் வேலைகளை பணிவுடன் செய்யச் சொல்லியும், “கட்டளையாக” இருக்க கூடாது என்றும் கூறுகிறார். 

குறிப்பாக பெட்ரூம், பாத்ரூம் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஏரியாவுக்கும் போகும்போது அனுமதி கேட்க வேண்டும் என நிரூப் சொன்னதற்கு, இமான் அண்ணாச்சி, “முடியாது.. என்னய்யா பண்ணுவ?..” என்று கேட்டார். இதேபோல் வருண் உள்ளிட்ட சிலரும் இதனையே கறாராக கூறிவிட்டனர். ஆனால் நிரூப் கடைசியாக இந்த யோசனை மறுபரிசீலனை செய்வதாக கூறிவிட்டார்.

முன்னதாக இந்த டாஸ்க் தொடங்கும், “முன் நான் ஜெயிப்பதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று இமான் நிரூப்பிடம் கேட்டார். அப்போது நிரூப், “யார் வேண்டுமானாலும் ஜெயிக்கட்டும்.. ஆனால் இந்த காயினை நான் இப்போது தான் பயன்படுத்த முடியும். அப்படி பயன்படுத்த முடியாவிட்டால், வேறு எப்போதும் நான் பயன்படுத்த முடியாது! என்கிற சூழ்நிலை இருக்கிறது. எனவே நான் இந்த காயினை பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்தி விடுவேன்!” என்று கூறியிருந்தார்.

அப்போதே, இமான் அண்ணாச்சி,  “அப்படி என்றால் யார் ஜெயித்தாலும் வேஸ்ட். எப்படியும் நிரூப் தன் காயினை பயன்படுத்தி கேப்டன் ஆகிவிடுவான்!” என்று கூறி இருந்தார். இறுதியில் இமான் ஜெயித்த பிறகு நிரூப் காயினை பயன்படுத்த கேப்டன் ஆகிவிட்டார். இந்த நிலையில்தான் இமானுக்கும் நிரூப்புக்கும் முட்டிக் கொண்டுவிட்டது. இவர்களின் சண்டை எங்கே போய் முடியும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

Imman didnt obey captain niroop biggbosstamil5 vijay tv

People looking for online information on இமான்BiggBossTamil5, கேப்டன், நிரூப், நிரூப் Vs இமான், பிக்பாஸ், விஜய் டிவி, BB5, Biggboss, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Trending, Vijay Television, Vijay tv will find this news story useful.