"அண்ணாச்சி தொடர்ச்சியா இத பண்ணாரு.. அதான் வருத்தம்".. சின்ன பொண்ணு BREAKS OUT! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு பிஹைண்ட்வுட்ஸ் நிகழ்ச்சிக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் இணைந்திருந்த பாடகி சின்னப்பொண்ணு, நாடியா மற்றும் அபிஷேக்கைத் தொடர்ந்து 3வது ஆளாக வெளியேறினார்.

Advertising
>
Advertising

இந்நிலையில் சின்னப்பொண்ணுவிடம் பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் கேள்வி கேட்ட தயாரிப்பாளர் ரவீந்தர், “மிகவும் மரியாதையாக பார்க்கப்படும் அண்ணாச்சி, பட்டுனு அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் ஒருவார்த்தையை அவ்வப்போது சிலரிடம் சொல்லிவிடுகிறார். அண்ணாச்சி ஒதுக்கிவைத்தும், பார்ஷியாலிட்டி பார்த்தும் இருக்காரா? இல்லை இயல்பாக இருக்காரா?” என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த சின்னப்பொண்ணு, “அண்ணாச்சி இயல்பா இருக்காரா என என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் தாமரை மற்றும் இசைவாணி இருவரையும் சேர்த்துக்கொண்டு என்னை ஓரங்கட்டுற மாதிரியே பண்ணிக்கொண்டு இருந்தார். அண்ணாச்சி வந்தப்போ இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக கமல் சாரிடம் குறிப்பிட்டேன்.

தாமரை மற்றும் இசைவாணியுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் உள்ளே சென்றால், பேச்சை மடைமாற்றுவார். நான் ஏதாவது பேசலாம்.. பாடலாம் என நினைப்பேன். அதற்கு வாய்ப்பின்றி போய்விடும். நான் இருந்த வரை அவர் என்னை ஓரம் கட்டிவிட்டார் என்றே தோன்றியது.” என்று குறிப்பிட்டார்.

"அண்ணாச்சி தொடர்ச்சியா இத பண்ணாரு.. அதான் வருத்தம்".. சின்ன பொண்ணு BREAKS OUT! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Imman avoided me chinna ponnu biggbosstamil5 breaks out video

People looking for online information on Chinna ponnu biggbosstamil5 breaks out, Imman Annachi, Video, VijayTelevision will find this news story useful.