வெடித்ததா பிரச்சனை? TASK-ன் போது நடந்த அண்ணாச்சி மற்றும் வருண், அபினய் மோதல்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஒரு பிரச்சினை பூதாகரமாக வெடித்து, அதுவே அமுங்கி விட்டது என்று சொல்லலாம்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட பலூன் உடைக்கும் டாஸ்க்கில் தங்களுடைய பலூன் உடைந்த பிறகும் அபினய், வருண் உள்ளிட்டோர் நிரூபின் பலூனை உடைக்க முயற்சித்தனர். அப்போது இமான் அண்ணாச்சி அதை தடுத்து. “நீங்கள் உங்கள் பலூன் உடைந்தபோதே போட்டியில் இருந்து விலகி விட்டீர்கள்.. மீண்டும் நிரூப் பலூனை உடைக்க முயற்சிப்பது முறையல்ல” என்று பேசினார்.

அதற்கு அபினய் மற்றும் வருண் இருவரும் இமான் அண்ணாச்சியிடம் வாதம் செய்தனர். அதன் பிறகு ஐக்கி பெர்ரி அந்த போட்டிக்கான ரூல் புத்தகத்தைப் படித்தார். அதன்படி தங்கள் பலூன் உடைந்த பிறகு ஒரு போட்டியாளர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுகிறார் என்று எழுதியிருந்தது. அவர் மீண்டும் இன்னொருவரின் பலூனை உடைப்பதற்கு அனுமதி அல்ல என்றும் அதிலிருந்து தெரியவந்தது. இப்படி தான் அந்த சண்டை முடிந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த வார கேப்டனை தேர்ந்தெடுக்கும் போட்டிகள் கொடுக்கப்பட்டது. அதன்படி ராஜூ, இசைவாணி, சிபி, இமான் அண்ணாச்சி, பாவனி ஆகியோர் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு சத்தம் வந்ததும் சிலை ஆகிவிடுவார்கள். இவர்களை மற்றவர்கள் தொந்தரவு செய்பவர்கள். கவன சிதறலுக்கு  உள்ளாக்குவார்கள். அவர்களின் உணர்வுகளை சீண்டிப் பார்ப்பார்கள்.

அப்போது இசைவாணி வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை பற்றி இசைவாணி கதை சொல்லும் போது சொன்ன விஷயங்களில் இருந்து அவற்றையெல்லாம் எடுத்து பேசி இசைவாணி எமோஷனலாக வெளிக்கொணர வைக்க அபிஷேக் மற்றும் பிரியங்கா முயற்சிக்க, இமான் அண்ணாச்சி, “அதையெல்லாம் பேசாதீங்க.. சிரிக்க வைப்பது என்றால் மட்டும் சிரிக்க வையுங்கள்!” என்று கூற, மற்ற ஹவுஸ்மேட்ஸோ, “இது சிரிக்க வைப்பதற்கான டாஸ்க் அல்ல! எந்த வித உணர்வை வேண்டுமானாலும் நாம் அவர்களிடம் இருந்து வெளிக்கொண்டு வரலாம்” என்று கூற அபினய் மற்றும் வருண் நேரடியாக இமான் அண்ணாச்சியிடம் மோத தொடங்கினர்.

மேலும், “இவர் எப்போதுமே இப்படித்தான்.. டாஸ்க் வந்தால் இப்படி ஆகி விடுகிறார்” என்று அபிஷேக்கும் இமான் மீது கடிந்துகொண்டார். இப்படி பிக்பாஸ் வீட்டுக்குள் இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து பின்னர் இமான் அண்ணாச்சி அங்கிருந்து நகர்ந்ததால் அப்படியே அந்த சூழல் மாறியது. அதன்பின்னர் பேசும்போது இந்த டிராமாவை பார்த்து பாவனி பயந்து விட்டதாக  இமான் அண்ணாச்சி குறிப்பிடுகிறார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த  வார கேப்டனை தேர்வு செய்யும் போட்டியில் சிபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு வீட்டு வேலைகளுக்கான பொறுப்புகளையும் அணிகளையும் மாற்றி அமைத்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Imman Annachi varun abinahy clash isaivani emotional

People looking for online information on Abhinav, Abishek Raaja, AbishekRaaja RajuJeyamohanAksharaReddy PriyankaDeshpande, Akshara Reddy, அபிஷேக், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggboss abishek, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.