OPPENHEIMER-ல அணுகுண்டு வெடிக்கும் காட்சிக்கு பயன்படுத்தப்படும் கேமரா இதுதானாம்.. வெளியான தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக சினிமாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் முதல் முறையாக யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

IMAX film cameras filming Atomic Bomb scene in Oppenheimer
Advertising
>
Advertising

ஓப்பன்ஹைமர் என இந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டது.  இந்த படம், கை பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே. ஷெர்வின் எழுதிய ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வருகிறது.

இத்திரைப்படம் Syncopy Inc. மற்றும் Atlas Entertainment ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பாகும், நோலன், எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோருடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார்.

இரண்டாம் உலகப் போரின் முதல் அணு ஆயுதங்களை உருவாக்கிய மன்ஹாட்டன் திட்டத்தில் அவரது பங்கிற்காக "அணுகுண்டின் தந்தை" என்ற பெருமையைப் பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளரான ஓப்பன்ஹைமராக சில்லியன் மர்பி நடிக்கிறார். நோலனுடன் மர்பி ஆறாவது முறையாக இணைந்துள்ளார்.

மர்பியுடன் எமிலி பிளண்ட், மாட் டாமன், ராபர்ட் டவுனி ஜூனியர், மற்றும் ஃப்ளோரன்ஸ் பக் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் ஜூலை 21, 2023 அன்று அமெரிக்காவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. வார்னர் பிரதர்ஸ் விநியோகம் செய்யாத நோலனின் முதல் படம் இது. இந்த படம் IMAX, 70mm & 35mm ஆகிய இரு முறைகளில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் அணுகுண்டு வெடிக்கும் காட்சிகள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்காக மாதிரி வெடிப்பு சோதனையை செய்ய திட்டமிட்டிருப்பதாக நோலன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இது தொடர்பான காட்சிகளை படம்பிடிக்க IMAX பிலிம் கேமராக்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

IMAX film cameras filming Atomic Bomb scene in Oppenheimer

People looking for online information on Christopher Nolan, Hollywood, Oppenheimer will find this news story useful.