பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை அந்த வீட்டுக்குள் நூறு நாட்கள் கொடுக்க கூடிய வசதிகளுடனும், உடனிருப்பவர்களுடனும் ஒரு கலாச்சாரத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
அதே சமயம் மற்றவர்களின் உணர்வை மதித்தும், தம்முடைய உணர்வை வெளிப்படுத்தியும் ஹவுஸ்மேட்ஸ் வாழ வேண்டியதிருக்கிறது. இதேபோல் உணவு, அந்த வீட்டின் வேலைகள் என எல்லாவற்றையும் பகிர்ந்து செய்ய வேண்டியதும் இருக்கிறது.
அந்த வகையில்தான், “டீ குடித்த கிளாஸை எடுத்து வந்து ஜிங்கில் வைக்க வேண்டும். அப்போதுதான் கழுவுவேன்” என்று நமிதாவும் பிரியங்காவும் கூற, அபிஷேக் ஏதோ சொல்ல, அதற்கு பிரியங்கா, “நீ தான்டா இந்த வேலையை செஞ்சு இருப்ப!” என்று கூறுகிறார். அப்போது அபிஷேக், “நான் இரண்டு மூன்று கிளாஸ்களை எடுத்து வந்து ஜிங்கில் வைத்தேன். வேண்டுமென்றால் குறும்படம் போடுங்கள் பிக்பாஸ்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏனென்றால் அனைவருக்குமான வேலைகளை பிரித்தும் பகிர்ந்தும் செய்யவேண்டும் என்பதுதான் இந்த வீட்டின் முக்கிய வாழ்வியல் விதி. அந்தவகையில் பிக்பாஸ் வீட்டுக்குள் லுக்ஜூரி பட்ஜெட் தற்போது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி விளக்கம் கேட்க, பிரியங்காவும், “நம் தேவையை தாண்டி நாம் கேட்பது லுக்ஜூரி பட்ஜெட் ஆகிறது.
நமக்கு கொடுத்திருப்பது அப்படியான ஒன்றுதான். டீ குடிக்காமல் காஃபிதான் குடிப்பேன் என்றால் அது லுக்ஜூரி பட்ஜெட் ஆகும். இதற்கு மேலும் நாம் கேட்க முடியாது!” என்று கூறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நிரூப்பும் வந்து சேர்ந்து விடுகிறார்.
பின்னர் நிரூப் மற்றும் பிரியங்காவின் முன்னிலையில் பிக்பாஸ் கேமராவை பார்த்து பேசும் இமான் அண்ணாச்சி, “நாங்கள் எல்லாம் இப்போதான் இந்த வீட்டுக்குள் வந்து இருக்கிறோம். நாங்கள் கத்துக்குட்டி. பட்ஜெட்டில் ஒரு பத்து பைசா முன்ன பின்ன ஆனால் கொஞ்சம் பார்த்துக் கொள்ள மாட்டீர்களா? பிறகு சோத்துக்கு என்ன செய்றது” என்று காமெடியாக பேசுகிறார். உடன் இருந்த நிரூப் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
முன்னதாக இமான் அண்ணாச்சி தன்னுடைய கதையை பிக்பாஸ் வீட்டில் கதை சொல்லட்டுமா டாஸ்கில் சொல்லி இருந்தார். அப்போது மிகவும் சிரமப்பட்டு கலைத்துறையில் வந்த இமான் அண்ணாச்சி, தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான குழந்தைகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடும் பிரபல நிகழ்ச்சிகள் மூலம் தானும் பிரபலமானதாக கூறியிருந்தார்.
மேலும், ஆரம்பத்தில் மனைவியின் நகைகளை அடகு வைத்து, தன் துறையில் சாதிக்க முயன்ற இமான் அண்ணாச்சி பிற்காலத்தில், 100 பவுன் நகையை தன் மனைவிக்கு வாங்கிக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ஒரு காமெடியனாக பிக்பாஸ் டைட்டில் வின் பண்ண வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.