சின்னத்திரை ரியாலிட்டி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பிரபலமானவர்களாக மாறியுள்ளவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பாப்புலரான அஷ்வின் மற்றும் சிவாங்கி.

இந்த காம்போவின் க்யூட்டான மற்றும் கலகலப்பான அட்ராசிட்டிக்காகவே இவர்களுக்கென பிரத்தியேகமாக ‘அஷாங்கி’ என ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. அண்மையில் தான் அஷ்வின் மற்றும் சிவாங்கி இருவரும் குக் வித் கோமாளி டெலிவிஷன் ரியாலிட்டி ஷோவுக்கான மோஸ்ட் பாப்புலர் நபர்களுக்கான Behindwoods Gold Icons விருதுகளை பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்னொரு நிகழ்ச்சியில் பேசும்போது, அஷ்வின், ‘சிவாங்கி .. நான் உன்னோட மிகப்பெரிய Fan.. உன்னோட பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று சொன்னதும் சிவாங்கி வெட்கப்பட்டது, ‘நீங்க என்னுடைய நல்ல நண்பர்.. நலம் விரும்பி’ என கூறும் ப்ரோமோ விஜய் விடிவில் வெளியாகியிருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்சியின் 2வது சீசன் முதல் சீசனை விடவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை ஒட்டி இந்த நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இணையவழி விருந்தினராகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் சிவாங்கி அஸ்வினை குளுகுளு என்று அழைத்து ஏதோ பேச, செஃப் தாமு ‘என்ன சொல்லி கூப்ட்ட?’ என்று கேட்க, சிவாங்கி வெட்கப்பட்டுக்கொண்டே குளுகுளு என்று அழைத்ததாகக் கூறுகிறார்.
ALSO READ: மாரிக்கு ‘பிரபல நடிகர்’ கொடுத்த சர்ப்ரைஸ்!.. ‘நடிப்பு கர்ணா’ என தனுஷை புகழ்ந்த இயக்குநர்!