“நான் அடிமை இல்ல!.. இப்படி HARASS பண்ணிட்டு.. நாய் மாதிரி வாழணுமா?” - கொதித்த அக்‌ஷரா! #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்‌ஷரா மற்றும் சிபிக்கு இடையிலான சண்டை விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளது. தற்போது பள்ளி காலங்களை நினைவூட்டும் ‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க் நடந்து வருகிறது.

im not a slave akshara angry over ciby act BiggBossTamil5
Advertising
>
Advertising

இதில், சிபி வார்டனாகவும் ராஜூ, அபிஷேக், அமீர் உள்ளிட்டோர் ஆசிரியராகவும் வலம் வருகின்றனர். அக்‌ஷரா உள்ளிட்டோர் மாணவர்களாக இருக்கின்றனர். அப்போது ராஜூ அக்‌ஷராவுக்கு திருக்குறள் சொல்லித்தர, 5 திருக்குறள்களை மனப்பாடமாக சொல்ல வேண்டும் என்று ராஜூவும், சிபியும் சொல்லிவிட்டனர்.

im not a slave akshara angry over ciby act BiggBossTamil5

ஆனால் தான் குளிக்கவில்லை, சாப்பிடவில்லை, தனக்கு தமிழே வராதபோது எப்படி 5 திருக்குறள்களை மனப்பாடம் பண்ணி சொல்ல முடியும்? சில விஷயங்கள் வந்தால் தான் வரும். வராது என்றால் வராது. டைம் ஆகும் என ஆக்ரோஷமாக கத்திவிட்டு, பூ ஜாடி தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டார்.

இதனை அடுத்து டிரெஸ்ஸிங் ரூம்க்கு சென்றுவிட்ட அக்‌ஷரா, “நான் ஒன்னு அவனுக்கு (சிபிக்கு) அடிமை இல்ல!.. டாஸ்க்னா டாஸ்கை பண்ணனும்.. அதைவிட்டுட்டு, தனிப்பட்டமுறையில் செய்வதெல்லாம் என்ன? எந்த ஸ்கூல்ல இப்படி இருக்கும்? இப்படியா harass பண்ணிட்டு இருப்பாங்க” என்று பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த ராஜூ ஏதோ சொல்ல வர,  “நீ பேசாத.. ஓவரா பண்ணாத” என அக்‌ஷரா கத்தினார். அதற்கு ராஜூ,  “நான் ஓவரா பண்றேனா?”.. என கேட்க,  “ஆமா.. நீயும் தான்.. அவனும் தான் .. எல்லாரும் ஓவரா பண்றீங்க”.. என்று அக்‌ஷரா பதில் அளிக்கிறார்.  மீண்டும் “பிறகு இந்த டாஸ்க் இதானே? இதை செய்துதானே ஆக வேண்டும்?” என ராஜூ கேட்கிறார்.

அதற்கு பதில் அளித்த அக்‌ஷரா, “அதுக்கு தண்டனை கொடுக்கட்டும். நான் பிக்பாஸ் கிட்ட பேசிக்கிறேன்..  இப்படி நாய் மாதிரி வாழணும்னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்ல” என்று கூறிவிட்டார்.

மற்ற செய்திகள்

Im not a slave akshara angry over ciby act BiggBossTamil5

People looking for online information on Akshara angry ciby BiggBossTamil5, Akshara Reddy will find this news story useful.