THIRUCHITRAMBALAM: கவனிச்சீங்களா? ‘திருச்சிற்றம்பலம்’ படம் முழுதும் ஒரு கேரக்டராகவே வரும் ‘ராஜா’.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது. 

Advertising
>
Advertising

Also Read | Television Premiere: பிரபல டிவி சேனலில் காதல் & நகைச்சுவை நிறைந்த ‘ஹே சினாமிகா’ - எப்போ? எதுல?

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முறையே தனுஷின் தாத்தா மற்றும் அப்பாவாக நடித்துள்ளனர். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

காதலே செட் ஆகாமல் இருக்கும் டெலிவரி பாயான திருச்சிற்றம்பலம் தனுஷ்க்கு சிறு வயது முதலான தோழியாக ஷோபனா எனும் கேரக்டரில் அறிமுகமாகிறார் நித்யா மேனன். ஆனால் ஷோபனா திருச்சிற்றம்பலத்தின் வாழ்வில் இரண்டற கலந்தவளாகவே இருக்கிறாள். திருச்சிற்றம்பலத்தின் வாழ்க்கையில் வந்து போகும் மற்ற பெண்கள் போல் அல்லாமல், ஷோபனா அவனது வாழ்வெங்கும் நிறைந்திருக்கிறாள். தம்முடைய விருப்பு, வெறுப்பு அனைத்தையும் தனக்குள்ளேயே மறைத்து வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க திருச்சிற்றம்பலத்தின் மகிழ்ச்சி விரும்பியாக மட்டுமே இருந்திருக்கிறாள்.

இதில் திருச்சிற்றம்பலத்தின் வாழ்க்கையுடன் தொடர்புடைய இன்னும் இரண்டு ராஜாக்கள் வருகின்றனர். ஒருவர் பாரதிராஜா. அவர்தான் திருச்சிற்றம்பலத்தின் தாத்தா, அதாவது சீனியர் திருச்சிற்றம்பலம். திருச்சிற்றம்பலத்தின் தோழனாகவே வாழ்ந்து அவனுக்கு அவனையும் ஷோபனாவையும் பற்றி இறுதியில் எளிமையாக புரியவைக்கிறார். அப்படியானால் அந்த இன்னொரு ராஜா யார்? அவர்தான் இளையராஜா. ஆம், இளையராஜா இந்த படத்தில் தோன்றவில்லை என்றாலும் ஒரு பேசா கதாபாத்திரமாய் இருக்கிறார்.

தமிழ் மண்ணின், தமிழ் மனதின் இசையாக ஆழ்மனதை ஊடுருவியிருக்கு ராஜா, திருச்சிற்றம்பலத்தின் வாழ்விலும் கலந்திருக்கிறார். தற்காலத்தில் வாழும் 90S Kid ஆன திருச்சிறம்பலம் தன் வாழ்க்கையையும் ராஜாவின் பாடலை போல மென்மையாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். ராஜாவின் பெஸ்ட் பாடல்கள் 80களில் இருந்து உருவானாலும், அது 80களில் வாழ்ந்தவர்களின் காதுகளோடு கரைந்துவிடவில்லை. 90களில் வாழ்பவர்களிடமும் தொடர்கிறது என்பதற்கு உதாரணமாய் திருச்சிற்றம்பலம் கேரக்டர் திகழ்கிறது.

படத்தில் தனுஷ் ஏற்றிருக்கும் திருச்சிற்றம்பலம் எனும் கதாபாத்திரத்தின் மொபைல் ரிங் டோனை இந்த படத்தில் பலமுறை ஒலிக்க விட்டிருக்கிறார்கள். அதை கவனித்தவர்களுக்கு தெரியும் அது ராஜாவின் பாடல் என்று. இதேபோல், தனுஷின் தனி அறையில் எப்போது ஒட்டப்பட்டிருக்கும் இளையராஜாவின் போஸ்டர் - எப்போது சோகமாக இருக்கும்போது ஆறுதலுக்காகவும், நிறைவாக இருக்கும்போது ரம்மியத்துக்காகவும் அந்த ஃபோட்டோ முன்பாக சென்று அமர்ந்து தியானம் செய்வது போல் ராஜாவின் இசையை தனுஷ் கேட்பது படம் முழுவதும் காட்டப்பட்டிருக்கும்.

சாதாரணமாக ஒரு காட்சியில் பாரதிராஜா, கைய தட்டிக்கொண்டே பாடும் சமாளிப்பு பாடலாக கூட, ‘ராக்கம்மா கையத்தட்டு’ பாடலையே பாடியிருப்பார். குறிப்பாக படத்தின் திருப்புமுனை காட்சியில் இடம்பெறும் ஒரு வசனத்தின்போது ராஜாவின் முகத்துடன் கூடிய இசைத்தட்டு காட்டப்பட்டிருப்பதை கவனிக்க முடியும்.

இவற்றுடன் கூடிய பின்னணி இசை மற்றும் பாடல்களை கூட அவ்வளவு கச்சிதமாக ராஜாவின் இசைக்காலத்தை நினைவூட்டும் வகையிலும், 90களின் நாஸ்டால்ஜியா உணர்வை மீட்டும் வகையிலும் அதே சமயம் ட்ரெண்டிங்காகவும் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கையாண்டிருப்பார். மழைப்பாடலில் தோழியுடன் தனுஷ் பாடும் ‘மேகம் கருக்காதா’ பாடலில் தனுஷ் குரல் கூட ராஜா பாடுவது போன்ற ஒலி அளவில் கேட்கும் விதமாக படம் நெடுகிலும் பேசா கதாபாத்திரமாய் திருச்சிற்றம்பலத்தின் வாழ்வில் வலம் வருவார் அந்த இன்னொரு ராஜா.!

Also Read | Vijayakanth: "விஜயகாந்த்னாலே இதான் நியாபகம் வரும்" - நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய கார்த்தி

தொடர்புடைய இணைப்புகள்

Illaiyaraaja reference in Thiruchitrambalam movie scenes

People looking for online information on Anirudh, Dhanush, Illaiyaraaja, Thiruchitrambalam will find this news story useful.