திடிரென பீச்சில் இலியானா.. பிகினி உடையில் வைரலான செம்ம HOT புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா.

Advertising
>
Advertising

BEAST FDFS: போறிங்களா? இந்தாங்க கொத்து புரோட்டோ சாப்பிடுங்க.. வியக்க வைத்த ஓட்டல் உரிமையாளர்!

பின் தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையானார். பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். இந்தியில் வருண் தவான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், சயிப் அலி கான் போன்ற ஹூரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். இலியானா, கடைசியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொடரான ​​தி பிக் புல்லில் அபிஷேக் பச்சன் மற்றும் நிகிதா தத்தாவுடன் நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், சுய-காதல் பற்றிய பதிவுகளை பகிர்ந்து கொண்டார். அதில், தனது தோற்றத்தைப் பற்றி 'எப்போதும் கவலைப்படுவதாக' கூறி. “எனது இடுப்பு மிகவும் அகலமாக உள்ளது, என் தொடைகள் மிகவும் தள்ளாடுகின்றன, என் இடுப்பு போதுமான அளவு குறுகவில்லை, என் வயிறு போதுமான அளவு தட்டையாக இல்லை, என் மார்பகங்கள் போதுமானதாக இல்லை, என் பிட்டம் மிகவும் பெரியது, என் கைகள் மிகவும் ஜிகிலி, மூக்கு போதுமானதான வளர்ச்சி இல்லை, உதடுகள் போதுமான அளவு வளரவில்லை..... நான் போதுமான உயரம் இல்லை, போதுமான அழகாக இல்லை,  போதுமான புத்திசாலி இல்லை, போதுமான 'சரியான' இல்லை என்று நான் கவலைப்பட்டேன்,

பின்னர் அழகு குறித்து புரிதல் ஏற்பட்டது” என்று இலியானா எழுதி இருந்தார்.

இதற்கு முன்னதாக, இலியானா உடல் டிஸ்மார்ஃபிக் கோளாறுடன் போராடியதாகவும், அதனால் தற்கொலை எண்ணங்கள் கூட இருப்பதாகவும் கூறினார். 2017ல் நடந்த 21வது உலக மனநல காங்கிரஸில் அவர் இதைப் பற்றி பேசினார். கடந்த பிப்ரவரி மாதம் ஒருவரை 'ஒல்லியாக' மற்றும் 'அதிக நிறமாக' காட்டக்கூடிய அனைத்து புகைப்பட எடிட்டிங் ஆப் பயன்பாடுகளையும் நீக்கியதாக கூறியுள்ளார், நடிகை இலியானா டி'க்ரூஸ். மேலும் தனது உடற்பருமனான போட்டோவையும் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் நடிகை இலியானா  பிகினி உடையில் கடற்கரையில் படுத்து இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் செம வைரல் ஆகியுள்ளன. சமீபத்தில் ஹோலி பண்டிகையையும் பிகினி உடையில் இலியானா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்.. மாஸாக களமிறங்கிய பிரபல இளம் நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

Ileana D'Cruz latest bikini pictures goes viral on social media

People looking for online information on இலியானா, நண்பன், Ileana DCruz, Ileana DCruz latest bikini pictures, Kedi, Nanban will find this news story useful.