பிகினி உடையில் நடிகை இலியானா... நண்பர்களுடன் ஹோலி கொண்டாடிய லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை இலியானா பிகினி உடையில் ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Oscar 2022 : வில் ஸ்மித் அடித்தது குறித்து நடிகை சமந்தா போட்ட வைரல் பதிவு!

தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா, பின் தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையானார். பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். இந்தியில் வருண் தவான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், சயிப் அலி கான் போன்ற ஹூரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். இலியானா, கடைசியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொடரான ​​தி பிக் புல்லில் அபிஷேக் பச்சன் மற்றும் நிகிதா தத்தாவுடன் நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், சுய-காதல் பற்றிய பதிவுகளை பகிர்ந்து கொண்டார். அதில், தனது தோற்றத்தைப் பற்றி 'எப்போதும் கவலைப்படுவதாக' கூறி. “எனது இடுப்பு மிகவும் அகலமாக உள்ளது, என் தொடைகள் மிகவும் தள்ளாடுகின்றன, என் இடுப்பு போதுமான அளவு குறுகவில்லை, என் வயிறு போதுமான அளவு தட்டையாக இல்லை, என் மார்பகங்கள் போதுமானதாக இல்லை, என் பிட்டம் மிகவும் பெரியது, என் கைகள் மிகவும் ஜிகிலி, மூக்கு போதுமானதான வளர்ச்சி இல்லை, உதடுகள் போதுமான அளவு வளரவில்லை..... நான் போதுமான உயரம் இல்லை, போதுமான அழகாக இல்லை,  போதுமான புத்திசாலி இல்லை, போதுமான 'சரியான' இல்லை என்று நான் கவலைப்பட்டேன், பின்னர் அழகு குறித்து புரிதல் ஏற்பட்டது” என்று இலியானா எழுதி இருந்தார்.

இதற்கு முன்னதாக, இலியானா உடல் டிஸ்மார்ஃபிக் கோளாறுடன் போராடியதாகவும், அதனால் தற்கொலை எண்ணங்கள் கூட இருப்பதாகவும் கூறினார். 2017ல் நடந்த 21வது உலக மனநல காங்கிரஸில் அவர் இதைப் பற்றி பேசினார். கடந்த பிப்ரவரி மாதம் ஒருவரை 'ஒல்லியாக' மற்றும் 'அதிக நிறமாக' காட்டக்கூடிய அனைத்து புகைப்பட எடிட்டிங் ஆப் பயன்பாடுகளையும் நீக்கியதாக கூறியுள்ளார், நடிகை இலியானா டி'க்ரூஸ். மேலும் தனது உடற்பருமனான போட்டோவையும் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் தனது நண்பர்களுடன் பிகினி உடையில் ஹோலி கொண்டாடிய புகைப்படங்ள் & வீடியோக்களை நடிகை இலியான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில்,"கொஞ்சம் தாமதமாக இருந்தாலும், எனது முதல் ஹோலி பார்ட்டிக்கு சிறப்பாக அமைந்தது மற்றும் உங்கள் அன்பிற்கு நன்றி டார்லிங்" என தோல் மருத்துவர் Dr. நம்ரதா ஜட்வானி தஹ்தானியை டேக் செய்துள்ளார்.

TRENDING: முதல் முறையாக நடிகை தமன்னா வெளியிட்ட மாலத்தீவு Mash Up பிகினி வீடியோ!

Ileana d cruz holi celebration with her friends viral photos

People looking for online information on Holi celebration, Ileana, Ileana D Cruz, Ileana d cruz Holi Celebration will find this news story useful.