இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு எதுக்காக?.. ARR கொடுத்த ஹிண்ட்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துபாயில் அமைந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு இளையராஜா சென்றுள்ள சம்பவம், இசை ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளியுள்ளது.

Advertising
>
Advertising

துபாயில் நடைபெற்று வரும் 'Dubai Expo 2020' நிகழ்ச்சியில் 'இசைஞானி' இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு மிகவும் கோலாகலமாக நடைபெற்றிருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இசை பிரியர்களும் கலந்து கொண்டனர்.

சர்ப்ரைஸ் விசிட்

இந்நிலையில், இசைக் கச்சேரி முடிவடைந்த பிறகு, துபாயிலுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான ஸ்டூடியோவிற்கு இளையராஜா சென்றுள்ளார். அங்கு அவரை ஏ. ஆர். ரஹ்மான் வரவேற்றிருந்த நிலையில், இளையராஜாவுடன் அவர் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

நம்பிக்கையில்  ஏ.ஆர். ரஹ்மான்

இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், "மேஸ்ட்ரோவை எங்களின் Firdaus ஸ்டூடியோவிற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எங்களின் Firdaus Orchestra வுக்காகவும் வேண்டி, வருங்காலத்தில் அவர் ஏதாவது இசையமைப்பார் என நம்புகிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் வைரல்

இசையுலகில் இரண்டு பெரிய கலைஞர்கள் நேற்று சந்தித்துக் கொண்ட சம்பவம், ஒட்டு மொத்த இசை ரசிகர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை அளித்துள்ளது. பலரும் இதனை தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 

இளையராஜா 75

கடைசியாக, 'இளையராஜா 75' நிகழ்ச்சியில், இளையராஜாவுடன் மேடையை பகிர்ந்து கொண்டார் ஏ.ஆர். ரஹ்மான். அப்போது, புன்னகை மன்னன் படத்தில் வரும் பின்னணி இசையை, ஏ.ஆர். ரஹ்மான் மேடையிலேயே வாசித்துக் காட்டினார். பழைய பாடல் ஒன்றை இளையராஜா முன்பு, ஏ. ஆர். ரஹ்மான் வாசித்திருந்த நிகழ்வும், இசை உலகின் முக்கியமான அம்சமாக  பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiyaraaja visits ar rahman studio at dubai after expo 2020

People looking for online information on AR Rahman, Dubai, Expo 2020, Firdaus Studio, Ilaiyaraaja will find this news story useful.