“ராஜா கைய வச்சா… அது “… ‘STRANGER THINGS’ MEETS இசைஞானி… வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளையராஜா டிவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | “அது இன்னும் லோகேஷ்க்கே தெரியாது”... ‘விக்ரம் 3’ பற்றி press meet-ல் சர்ப்ரைஸ் கொடுத்த கமல்

இசைஞானி…

இதுவரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. தற்போது வெற்றிமாறனின் விடுதலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இளையராஜாவுக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்காக உலகம் முழுவதும் கச்சேரிகளை இளையராஜா கடந்த வருடங்களில் நடத்தி வந்துள்ளார்.

அடுத்தடுத்து கச்சேரிகள்…

இளையராஜாவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அவரின் இசைக் கச்சேரிகள் நடந்தன. அதில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு இளையராஜாவை வாழ்த்தி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். அதையடுத்து வரும் ஜூன் 2 மற்றும் 5 ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இசைக் கச்சேரிகள் நடத்துகிறார்.

ராஜா கையவச்சா….

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரபல சீரிஸான ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஒரு தொடராக உள்ளது. நெட்பிளிக்ஸ் தற்போது அந்த தொடரை தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து வெளியிட உள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்த சீரிஸின் ஒரு ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் meets இளையராஜா…

கம்ப்யூட்டர் செண்ட்டரில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள், அங்கிருந்து ஒரு மாய உலகத்துக்கு செல்வது போல காட்சிகள் இருக்க, அந்த உலகத்தில் இளையராஜா தன்னுடைய குழுவினரோடு இசையமைப்பது போன்று அந்த ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்காக இளையராஜா உருவாக்கியுள்ள தீம் இசை தற்போது இணையத்தில் பலராலும் வியந்தோதப்பட்டு வருகிறது. விரைவில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் டப் ஆகி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோவை இளையராஜா தன்னுடைய டிவிட்டரில் பகிர்ந்து அதில் “ ராஜா கைய வச்சா அது ஸ்ட்ரேஞ்சா போனதில்ல” என்று கூறியுள்ளார்.

 

Also Read | நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி & அருண் விஜய் நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’… டீசர் அப்டேட்

 

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiyaraaja viral video composing music stranger things

People looking for online information on இசைஞானி, இளையராஜா, Composing music, Ilaiyaraaja will find this news story useful.