'இளையராஜா' இசையமைத்த பாடலில் சொற்குற்றமா..? ‘மாயோன்’ பட LYRICAL வீடியோவில் சர்ச்சை?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையிசை ஆர்வலர்களிடத்தில் சிபிராஜ் நடித்துள்ள ‘மாயோன்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கின் லிரிக்கல் வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'. இந்த திரைப்படத்தில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என்.கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

Advertising
>
Advertising

இசைஞானி இளையராஜாவின் இசையில், கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி & காயத்திரி குரலில் வெளியான 'மாயோன்' பட பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. 'மாயோனே மணிவண்ணா..' என்ற இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவும் பாடலுடன் வெளியானது. தற்போது இந்த லிரிகல் வீடியோ இசை ஆர்வலர்களிடத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக இசை விமர்சகர்கள் பேசுகையில், “மாயோனே மணிவண்ணா..”என தொடங்கும் பாடலில் 'தஞ்சம் என்று நம்பி உந்தன் தாழ் பணிந்தோம்..' என்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வரிகளில் 'தாள் பணிந்தோம்' என்பதற்கு பதிலாக 'தாழ் பணிந்தோம்' என்றிருக்கிறது. 'தாள்' என்பதன் பொருள் வேறு. 'தாழ்' என்பதன் பொருள் வேறு.

பக்திப் பாடலாக உருவாகியிருக்கும் இந்த பாடலில் இசைஞானி இளையராஜாவும், பாடகிகளான ரஞ்சனி & காயத்ரியும் 'தாள் பணிந்தோம்’ என பொருள் மற்றும் உச்சரிப்பு பிசகாமல் பாடியிருக்கிறார்கள். ஆனால் லிரிக்கல் வீடியோவை உருவாக்கிய தொழில்நுட்ப குழுவினர், 'தாழ் பணிந்தோம்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே படக்குழுவினர், ‘தாள் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? அல்லது ‘தாழ் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? என்பதைப் பற்றி உடனடியாக தெளிவுப்படுத்தவேண்டும்.” என விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.

'தாள் பணிந்தோம்' என்பதற்கு, 'இறைவனின் பாதம் பணிந்தோம்' என நேரடியான பொருளை வழங்குகிறது. 'தாழ் பணிந்தோம்' என்பதற்கு 'தாழ்மையுடன் பணிந்தோம்' என்ற பொருளை தருகிறது. இந்த துல்லியமான வேறுபாட்டால், இசை ஆர்வலர்கள் பலரும் இணையத்தில் விவாத பொருளாக இதை பேசி வருகிறார்கள்.

இது குறித்து படக்குழுவினர் தெரிவிக்கையில், “கதைச்சூழலின் படி” தாள் பணிந்தோம்’,‘தாழ் பணிந்தோம்’ என இரண்டுமே பொருத்தமானது தான் என்றும், லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ‘தாழ் பணிந்தோம்’ என்ற சொல்லும், இசை விமர்சகர்கள் உணர்த்தும் ‘தாள் பணிந்தோம்’ என்ற சொல்லும் புறநானூற்று இலக்கிய ஆதாரத்தின் படி இறைவனின் பாதம் பணிந்து வழிபடும் பொருளைத் தான் குறிப்பிடுகிறது.

இருந்தாலும் இசை விமர்சகர்கள் சுட்டிக் காட்டியதை ஏற்றுக்கொண்டு, 'தாள் பணிந்தோம்' என லிரிக்கல் வீடியோவில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.  ''என விளக்கமளித்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiyaraaja musival sibiraj Maayon lyrical video controversy

People looking for online information on Ilaiyaraaja, Ilaiyaraja, Maayon, Sibiraj will find this news story useful.