இசைஞானி இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்தியாவில் பெரும்பாலான மொழிகளில் தனது இசையால் பல சாதனைகள் புரிந்தவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சுமார் 40 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இளையராஜா இசையமைத்த படங்கள் பெரும்பாலானவை பிரசாத் ஸ்டுடியோவில் இசைமைக்கப்பட்டவை. இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இளையராஜாவிற்கும் அவர் பணிபுரிந்து வந்த இடம் சம்பந்தமாக கடந்த வருடம் பிரச்சனை எழுந்தது.

இதனையடுத்து பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா வெளியேறினார். இது சம்பந்தமாக இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், 'பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள என் அலுவலகத்தில் இசைக்குறிப்புகள், இசைக் கருவிகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இருந்தது. அதில் சில பொருட்கள் விலை மதிக்கமுடியாதவை.

சாய் பிரசாத் அவரது ஆட்கள் மூலம் என்னுடைய பொருட்களை நீக்கியும் , திருடியும், சேதாராப்படுத்தியும் உள்ளார் என்று எனக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. அவை கோடிக்கணக்கான விலைமதிப்பு கொண்டவை. அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Ilaiyaraaja Complaint against Prasad Studios at Chennai police commissioner | பிரசாத் ஸ்டுடியோஸ் மீது போலீஸ் கமிஷனரிடம் இளையராஜா புகார்

People looking for online information on Ilaiyaraaja, Prasad Studios will find this news story useful.