தளபதியை இயக்கினால், அவரது ROLE இதுதான்! - ரசிகரின் கேள்விக்கு மிஷ்கினின் மிரட்டலான பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஞ்சாதே, யுத்தம் செய், சைக்கோ, பிசாசு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் முன்னணி திரைப்பட இயக்குனர் மிஷ்கின்.

பெரும்பாலும் இரவு நேரங்களில் நடக்கும் கதைகளை மையமாக வைத்து திரைப்படங்களை எடுத்து வரும் மிஷ்கின் தனக்கே உரிய திரை மொழியால், ஏராளமான திரை ரசிகர்களை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் திரைப்படங்களைப் பற்றி கற்றுக்கொள்ள விரும்பும் பலருடனும் மிஷ்கின் அவ்வப்போது உரையாடி வருவார். அந்த வகையில் ரசிகர்களுடனும் திரைப்படம் எடுக்க பயின்று வருபவர்களிடமும் ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக உரையாடிய மிஷ்கின் தளபதி விஜய் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்டோரை பற்றி பேசியிருக்கிறார்.

முன்னதாக மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் பெரிய ஹிட்டானது. இந்த திரைப்படம் வழக்கமான பேய் படங்கள் போல் இல்லாமல் புதுமையாகவும் மென்மையாகவும் இருந்ததாக பல பாராட்டுகள் எழுந்திருந்தன. இதனைத் தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு இரண்டாம் பாகம் திரைப்படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் பிறந்த நாளான ஜூன் 22 அன்று, ட்விட்டர் ஸ்பேஸில் மிஷ்கின் பேசும்போது மிஷ்கினிடம் ரசிகர் ஒருவர், “தளபதி விஜயை வைத்து நீங்கள் திரைப்படம் இயக்கினால், அவருடைய கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும்?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு மிஷ்கின், “தளபதி விஜய்யை வைத்து திரைப்படம் எடுத்தால் அவருடைய கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரமாக இருக்கும்!” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் குஷி ஆகியிருக்கின்றனர்.

இதேபோல் பிசாசு இரண்டாம் பாகம் திரைப்படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு பற்றி பலரும் கேட்டிருக்கின்றனர். இதற்கு பதிலளித்த மிஷ்கின், “பிசாசு-2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா தம் நடிப்புக்காக தேசிய விருது வாங்குவார்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆண்ட்ரியா, கடைசியாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ALSO READ: Beast First Look பார்த்துட்டு...தளபதி விஜய் கொடுத்த Reaction என்ன? இயக்குநர் பகிர்ந்த வைரல் Secret!

If your direct thalapathy vijay what is his role Mysskin answer

People looking for online information on ThalapathyVijay Mysskin, Vijay BEASTFirstLook will find this news story useful.