"கோ படம் நான் பண்ணிருக்க வேண்டியது!".. மனம் திறந்த சிம்பு.. கலங்கவைக்கும் அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 54.

பிரபல முன்னணி நடிகர்களை வைத்து அயன், கோ, மாற்றாம், அனேகன், கவன், காப்பான் உள்ளிட்ட படங்களை வெற்றிகண்ட கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர். இவரது மறைவு குறித்து நடிகர் சிம்பு தமது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், “தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியை தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கேவி ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போது இருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லி இருந்தேன்.

தினமும் என்னோடு தொடர்பில் இருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது. பொய்யாக இருக்கக் கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராக வெற்றி பெற்றவர்களில் கேவி ஆனந்த் அவர்கள் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார்.

அவசரமாக பயணித்து விட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: 'கோ' படத்தின் ஷூட்டிங் ஸ்டில்லை பகிர்ந்த நடிகர் ஜீவா.. கே.வி.ஆனந்த் மறைவு குறித்து உருக்கம்!

"கோ படம் நான் பண்ணிருக்க வேண்டியது!".. மனம் திறந்த சிம்பு.. கலங்கவைக்கும் அறிக்கை! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

I was about to do ko movie simbu shares about KV Anand

People looking for online information on KV Anand, RIPKVAnandSir, Silambarasan TR will find this news story useful.