"என் அம்மாவ கொன்னவன் என் கண்ணு முன்னாடிதான் நின்னான்!".. BIGGBOSS அமீரின் கண்ணீர் கதை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 10 பேர் சுமார் 78 வது நாளை கடந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டிருக்கின்றனர். இதில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் கோரியோகிராஃபர்.

Advertising
>
Advertising

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அமீர் தன் கதையை கூறினார். அப்போது தன் தாயார் குறித்து பேசிய அமீர், “நான், அண்ணாம், அம்மா 3 பேர்தான், மண்ணு வீடு தான். ஊட்டியில் மிகவும் ஏழ்மையான குடும்பம். ஒரு கிலோ தக்காளி 2 ரூபாய், வீட்ல எப்போதுமே தக்காளி சட்னி - தக்காளி ரசம் தான் இருக்கும்.

நான் பிரபு தேவா மாதிரி டான்ஸ் ஆடணும்னு சொல்லிட்டே இருப்பாங்க.. அம்மாவுக்கு நான் டான்ஸ் ஆடுவது பிடிக்கும். எனக்கு டான்ஸ் பிடிக்காது. நான் ஆர்மிக்கு போகணும்னு தான் நினைச்சேன். அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்டா அடிச்சு வளர்த்தாங்க. நான் ஒரு லோக்கல் சேனல்ல நான் டான்ஸ் போட்டியில கலந்துகிட்டா அதை ஊர் முழுக்க சொல்லிட்டு பெருமைப்பட்டுக்கிட்டு இருந்தாங்க. எங்க அண்ணனின் சின்ன பழக்கவழக்கம் அம்மாவின் மனச கஷ்டப்படுத்தியது.

நானும் அம்மாவும் 2 பேரும் மட்டும் கோயம்புத்தூர்ல ஒரு வாட்கை வீட்ல குடியேறினோம். வாரம் ஒருமுறை படத்துக்கு கூட்டிட்டு போவாங்க. நான் சிம்பு ரசிகன் என்பதால், வல்லவன் படத்துக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அம்மா அனுப்பினாங்க. அம்மா ரொம்ப ரொம்ப அழகா இருப்பாங்க. என்ன மாதிரி இருக்க மாட்டாங்க.

ஸ்கூல்ல நான் ரொம்ப ரவுடித்தனம் பண்ணேன். சண்டை போடுவேன். அதனால் அம்மாவ நான் விட்டுட்டேன். அன்னைக்கு வேலைக்கு போன அம்மா, வீட்டுக்கு வரல. அந்த ஒரு நாள் இரவு அம்மா வீட்டுக்கு வருவாங்கனு நான் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்தேன். ஆனா அம்மா வரல. அதுக்கு அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

அடுத்த நாள் அம்மாவின் செயினுடன் வந்த போலீஸ் என்னிடம் விஷயத்தை சொல்லி, ஒரு ஏரிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கு என் அம்மாவின் உடல் மற்றும் புடவையை பார்த்ததுமே அம்மாவை தூக்கினேன், எறும்பாய் இருந்தது. என்ன ஆனதென தெரியவில்லை. போலீஸார் என்னை ஸ்டேஷன் அழைத்து வந்தனர். அம்மாவ கொல பண்ணவன் என் கண் முன்னாடிதான் இருந்தான்.

என் அம்மாவை கழுத்தை நெரித்து பின் அம்மா சாகாததால், அம்மாவின் தலையில் கல்லை போட்டு கொன்னதுவரை அவன் போலீஸாரிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவனை.... அந்த விஷயம் வேண்டாம்.

அம்மா நினைவால் இரவெல்லாம் அழுவேன். இரவென்றாலே எனக்கு பயம். பிக்பாஸ் வீட்டிலும் இரவு அழுதேன். சிபி, அக்‌ஷரா வீடுகளில் இருந்து வந்து பேசும்போது எனக்கு கஷ்டமா இருந்துச்சு. சின்ன ஒரு லோக்கல் சேனலில் நான் டான்ஸ் ஆடும்பொது ஊர் முழுக்க சொன்ன என் அம்மா, இன்னைக்கு தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய சேனலில் இவ்வளவு பெரிய ஷோவில் நான் நிற்கிறேன். இப்போது அம்மா இல்லை. ஆனால் இந்த சாதனைகள் எல்லாம் அம்மாவுக்காக தான் என நான் நினைத்துக் கொள்கிறேன்” என்று அழுதபடி கூறினார்.

I saw the killer of my mother amir breaks out his story biggboss

People looking for online information on Amir mother, Amir mother killed, Biggboss amir mother, Biggboss amir mother killed, Biggbosstamil5 amir will find this news story useful.