தமிழக மாணவர்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறியதாக எழுந்த கண்டனத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், டெல்லி மாணவர்களின் உரிமையை தமிழக மாணவர்கள் தட்டிப் பறிப்பதாக பிரகாஷ் கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு சமூக வலைதளங்களில் தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த சர்ச்சை பேச்சு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் தனது ட்வீட்டில், “நான் அப்படிப்பட்ட கருத்தைக் கூறவே இல்லை. நான் பேசியதை வேண்டுமென்றே தவறாக யாரோ சித்தரித்துள்ளனர். இப்படி செய்தவர்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தயாரிப்பாளார் தனஞ்செயன், ‘உங்கள் தரப்பு விளக்கத்தை கூறியதற்கு நன்றி. உங்களது எதிர்கால அரசியல் நோக்கம் குறித்த அக்கறையில் கூறுகிறேன். அரவிந்த கெஜ்ரிவால் போன்ற குருகிய மனப்பான்மையுடைய அரசியல் தலைவர்களுக்கு ஆதரவளிக்காதீர்கள். இந்தியா இந்தியர்களுக்கே. பிரிவினை வேண்டாம்’ என ட்வீட் செய்துள்ளார்.