"VARUN-அ KISS பண்ல!.. பாவனி - அமீர் விஷயம் தெரியாது".. BIGGBOSS அக்‌ஷரா பேட்டி.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அண்மையில் வெளியேறிய அக்‌ஷரா, தற்போது பிஹைண்ட்வுட்ஸ் தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

Advertising
>
Advertising

அக்‌ஷரா பேட்டி

இந்த பேட்டியில் ‘பிக்பாஸ்’ அக்‌ஷரா பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக இந்தப் பேட்டியில் வருண் & அக்‌ஷரா முத்தம் குறித்து பேட்டியாளர் கேட்கிறார். அதில், “பிக்பாஸ் வீட்டுக்குள் வருணுக்கு அக்‌ஷரா முத்தம் கொடுத்ததாக பேசப்பட்ட விஷயங்கள் இணையதளம் முழுக்க ட்ரெண்ட் ஆகியிருந்தன.

கேள்வி 

முன்னதாக பாவனிக்கு அமீர் கொடுத்த முத்தம் குறித்தும் பெரிய அளவில் பேசப்பட்டன. ஆனால் இரண்டையுமே மக்கள் பிரித்துப் பார்க்கிறார்களே?. பாவனிக்கு அமீர் முத்தம்தான் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? என்று பேட்டியாளர் அக்‌ஷராவிடம் கேட்கும் பொழுது இதற்கு அக்‌ஷ்ரா பதில் கூறியிருந்தார்.

BiggBoss: “கடன் பிரச்சனை இருக்குல்ல?.. பணத்த எடுத்துக்கோயேன்?”.. நிரூப் கேள்வி.. தாமரை தெறி பதில்!

வருணை Kiss பண்ணல 

அதில் பேசிய அக்‌ஷரா, “அடிப்படையில் நான் வருணை கிஸ் பண்ணவில்லை. குட்நைட் சொல்வதற்காக ஹூட்டி மீது ஒரு‌ பெக் கொடுத்துவிட்டு போனேன். அது மண்டை மீது டச் கூட பண்ணவில்லை.  அத்துடன் பிக்பாஸ் வீட்டுக்குள் ராஜூ அண்ணா, நிரூப், வருண், அண்ணாச்சி அண்ணா உள்ளிட்டோரை இயல்பாக கட்டிப்பிடித்து இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் விடிந்ததும் நான் சின்னப்பொண்ணு அக்காவை காலையில் கட்டிப்பிடிப்பேன். எனவே நார்மலாகவே ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன்பாக இப்படி நாங்கள் செய்வது மிகச் சாதாரணம்.

“45.. 15.. எனக்கு 7 லட்சம்... கோடி ரூபா-னாலும் வேணாம்!”.. பறக்கும் BiggBoss பணப்பெட்டி பேச்சுகள்!

அமீர் - பாவனி விஷயம் சத்தியமா தெரியாது! 

ஆனால் அமீர் - பாவனி முத்த விவகாரம், நான் நீ வெளியே வந்த பிறகுதான் பார்த்தேன். எனக்கு அது பற்றி தெரியவில்லை. அவர்கள் விவகாரத்தில் உள்ளே என்ன நடந்தது என்று யாருக்குமே சத்தியமாக தெரியாது! எனக்கும் தெரியாது. இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா? என்று வெளியே வந்துதான் பார்த்து தெரிந்து கொண்டோம்..” என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார். அக்‌ஷரா பேசும் முழு வீடியோ இணைப்பில் இருக்கிறது.

"VARUN-அ KISS பண்ல!.. பாவனி - அமீர் விஷயம் தெரியாது".. BIGGBOSS அக்‌ஷரா பேட்டி.. வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

I didnt kiss Varun actually BiggBoss Akshara Exclusive Interview Video

People looking for online information on Akshara Exclusive, Akshara kissed varun, Amir kissed pavani, BiggBoss5, BiggBossTamil5, Pavani amir kiss, Varun akshara kiss will find this news story useful.