கொந்தளித்த YASHIKA.. "DELIVERY BOY மரணத்துக்கு நான் காரணமா?".. "ஒவ்வொரு நொடியும்".. உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை யாஷிகா கார் விபத்துக்குள்ளானதை அடுத்து, தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது கண்விழித்துள்ள அவர் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

i did unintentionally but didnt kill delivery boy Yashika

ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று டிவைடரில் மோதியதால் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது. இந்த விபத்து சம்பவத்தில் யாஷிகாவுடன் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி உயிரிழந்தார். இது தொடர்பாக யாஷிகா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

i did unintentionally but didnt kill delivery boy Yashika

இந்நிலையில், முதல் பதிவாக, தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி சொன்ன யாஷிகா, “உண்மையில் எனக்கு வாழ விருப்பமே இல்லை. நீங்கள் கொடுக்கும் நம்பிக்கையால் மீண்டு வருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, இன்ஸ்டாவில், “ஒரு innocent தோழியை அழைத்துச் சென்று அவர் மரணத்துக்கு காரணமாக இருக்கும் நீங்கள் ஏன் பிழைத்தீர்கள்..” என்று ஒருவர் காட்டமாக விமர்சிக்கும் தொனியில் கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள யாஷிகா, “ஒவ்வொரு நொடியும் என்னை வருத்தத்தில் ஆழ்த்தும் சோஷியல் மீடியாவுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ”இப்படித்தான் முன்பு ஒருமுறை வேகமாக வாகனம் ஓட்டி ஒரு டெலிவரி பாய் உயிர் பறிபோவதற்கு காரணமாக இருந்தீர்கள்” என இன்னொருவர் குற்றம் சாட்ட, அதற்கு பதில் அளித்த யாஷிகா, “என் நெருங்கிய நண்பர்களின் வாழ்வில் எந்த உள்நோக்கமும் இன்றி இப்படியான தவறை செய்துவிட்டேன்.

ஆனால் டெலிவரி பாய் சாக நான் காரணமாக இருந்தேன் எனும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அந்த கேஸ் பற்றி டி.நகர் காவல் நிலையத்தில் விசாரியுங்கள். அந்த காரில் கூட நான் இல்லை. ஒருவரின் மரியாதையை சீர்குலைக்கும் முன் உண்மை தரவுகளுடன் வாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: "Miss You பவானி.. Life முழுக்க குற்ற உணர்ச்சியோட..".. சிகிச்சைக்கு பின் யாஷிகாவின் உருக்கமான முதல் Post!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

I did unintentionally but didnt kill delivery boy Yashika

People looking for online information on Bhavani, Caraccident, Yashika Aannand, Yashikaaccident will find this news story useful.