SANJAY DUTT : ஷூட்டிங் விபத்தில் KGF 2, LEO நடிகர் சஞ்சய் தத் -க்கு காயமா? வெளியான உண்மை பின்னணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சஞ்சய் தத் பிரபல கன்னட திரைப்படம் ஒன்றில் நடிக்கும் பொழுது விபத்துக்குள்ளாகி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார். 

Advertising
>
Advertising

கேஜிஎப் 2 திரைப்படத்தில் நடித்த சஞ்சய் தத் பாலிவுட்டில் புகழ்பெற்ற முன்னணி நடிகர். இவர் தற்போது தமிழில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் நடிக்கும் இந்த திரைப்படத்தில் இவர்களுடன் த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் காஷ்மீரில் நடந்துவந்தது. அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்ததை அடுத்து சென்னையில் அடுத்து நடக்கவிருக்கும் லியோ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் சஞ்சய் தத் காத்திருக்கிறார். இதனிடையே கன்னடத்தில் தயாராகி வரும் KD என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். பெங்களூரை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்துக்கான சண்டைக்காட்சியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாகவும் அதில் சஞ்சய் தத் காயமடைந்து மருத்துவமனை சிகிச்சைக்கு பின் மும்பை சென்றதாகவும் செய்திகள் பரவிவந்தன.

இந்நிலையில் இந்த தகவல்கள் உண்மையல்ல என்றும், கடவுள் அருளால், தான் நலமுடன் இருப்பதாகவும், KD படக்குழு தன்னை நல்லபடியாய் கவனித்துக்கொள்வதாகவும் ட்வீட் பதிவிட்டு, தமது நலத்தை உறுதி செய்துள்ளார் நடிகர் சஞ்சய் தத்.

தொடர்புடைய இணைப்புகள்

I am fine and healthy LEO Sanjay Dutt Health Update

People looking for online information on Sanjay Dutt will find this news story useful.